தமிழ்நாடு

Rajinikanth : அப்பல்லோவில் நடிகர் ரஜினிகாந்த்.. தள்ளிப்போகுமா வேட்டையன் ட்ரெய்லர்?

Rajinikanth Admitted in Hospital : நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Rajinikanth : அப்பல்லோவில் நடிகர் ரஜினிகாந்த்.. தள்ளிப்போகுமா வேட்டையன் ட்ரெய்லர்?
உடல்நலக் குறைவு காரணமாக, ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

Rajinikanth Admitted in Hospital : சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்திற்கு பிறகு 'வேட்டையன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

வேட்டையனில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் வேட்டையன் திரைப்படத்தின் ட்ரெய்லர், நாளை அக்.2ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் 'கூலி'. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என மாபெரும் வெற்றிப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், ரஜினியுடன் கூட்டணி வைத்துள்ளதால் 'கூலி' படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்(Actor Rajinikanth), கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவருக்குப் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளது.

கூலி திரைப்படத்தின் போது மழைக்காட்சியில், நடித்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மருத்துவப் பரிசோதனைக்கு பிறகே, அடுத்தக்கட்ட சிகிச்சைகள் குறித்தும், எத்தனை நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்பது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த 28ம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து கூலி படப்பிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்பிய நிலையில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ரஜினிகாந்த்துக்கு அறுவை சிகிச்சை எதுவும் நடக்கவில்லை எனவும், ஏற்கனவே திட்டமிட்டப்படி சில பரிசோதனைகள் நடக்க உள்ளதாகவும், அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, நேற்றைய தினம், ரஜினிகாந்த் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மற்றும் மூத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏவிஎம் சரவணன் ஆகியோரை சந்தித்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. வேட்டையன் திரைப்படத்தின் ட்ரெய்லர், நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு நிலையில், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், ட்ரெய்லர் தள்ளிப்போகுமா என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.