மத்திய அரசுக்கு மொய் வைக்கும் காங்., கவனம் பெறும் வித்தியாசமான கண்டன போராட்டம்
தமிழ்நாட்டுக்கு நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு 1001 ரூபாய் வழங்கும் போராட்டத்தை ஆகஸ்ட் 23ம் தேதி முதல் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு 1001 ரூபாய் வழங்கும் போராட்டத்தை ஆகஸ்ட் 23ம் தேதி முதல் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு போதிய நிதி தருவதில்லை என்பது மாநில அரசு பல நாட்களாக வைக்கப்படும் குற்றச்சாட்டாகவே இருந்துவருகிறது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீ்வ்காந்தியின் 80வது பிறந்தநாளையொட்டி சென்னை சின்னமலையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ”ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளில் இன்று தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியால் கொண்டாடப்பட்டு வருகிறது.
கர்நாடகா, ஆந்திரா மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோரை முதல்வராக கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான். அந்தவகையில் தமிழ்நாட்டில் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராவதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் தருவதாக மத்திய அரசு கூறியது. ஆனால் இதுவரை தரவில்லை. தமிழ்நாட்டு மக்களின் நலம் கருதி மத்திய அரசு பேச வேண்டும். உண்மையையே பேசத் தெரியாதவர்கள் தான் பாஜகவினர்.
மேலும் படிக்க: சகோதரியின் உயிர்காக்க சகோதரர் செய்த செயல்..கண்களை கலங்கவைக்கும் அக்கா-தம்பி ஸ்டோரி!
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து வரும் 23ம் தேதி முதல் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு 1001 ரூபாய் வழங்கும் போராட்டத்தை நடத்த உள்ளோம். கருணாநிதிக்கு தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் சேர்ந்து நாணயம் வெளியிட்டுள்ளது. அவருக்கு யார் யாரெல்லாம் பாராட்டு தெரிவித்தார்களோ அதை நாங்கள் வரவேற்கிறோம். அதில் அரசியல் கிடையாது. இவ்வளவு காலங்களாக கலைஞர் மீது வசை பாடி குற்றங்களை சுமத்திய பாஜக இனிமேலாவது திருத்தி திரும்ப பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்”
காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள 1001 ரூபாய் வழங்கும் இந்த வித்தியாசமான போராட்டம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
What's Your Reaction?