Vettaiyan Review: “அய்யோ என்ன விட்ருங்க..” ரஜினியின் வேட்டையன் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதா இல்லையா என்பதை இப்போது பார்க்கலாம்.

சென்னை: தசெ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம், அதிக எதிர்பார்ப்புடன் இன்று வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஜினி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் ஆபிஸராக நடித்துள்ள வேட்டையன், ஆக்ஷன் ஜானரில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பு தான் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
சுருக்கமாக 20 வருடங்களுக்கு முன்னாடி வந்திருந்தால் கூட வேட்டையன் நல்லா இருந்துருக்காது, வேட்டையன் மொத்தமாக டிசாஸ்டர் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வேட்டையன் படத்துக்கு 3.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார் பிரபல சோஷியல் மீடியா ட்ராக்கர் அமுதபாரதி. படத்தின் முதல் சூப்பராக இருந்தாலும், இரண்டாம் பாதி ரொம்பவே சுமார். ரஜினியின் இன்ட்ரோ சீன், விசாரணை நடத்தும் காட்சிகள், இரண்டாவது பாதியில் வரும் ஒரு ஃபைட் சீன், சில எமோஷனல் காட்சிகள் மட்டும் ஒர்க் அவுட் ஆகிறது. இரண்டாவது பாதி முழுவதும் யூகிக்கக் கூடிய அளவில் தான் காட்சிகள் உள்ளன. அனிருத்தின் இசை ஓரளவு நன்றாக வந்துள்ளது, ரஜினி – ஃபஹத் பாசில் வரும் சீன்ஸ் சூப்பர், ஆனால் அமிதாப் கேரக்டர் கனெக்ட் ஆகவில்லை, தசெ ஞானவேல் இன்னொரு சோஷியல் மெசேஜ் கதை சொல்லியிருக்கிறார் என விமர்சனம் செய்துள்ளார்.
அதேபோல், சோஷியல் மீடியா ட்ராக்கர் கிறிஸ்டோபர் கனகராஜ் தனது விமர்சனத்தில், ரஜினி எப்போதும் போல தரமான சம்பவம் செய்துள்ளார். ஃபஹத் பாசில் கேரக்டர் சூப்பராக இருந்தாலும், அமிதாப் பச்சன், ராணா பாத்திரங்கள் ஸ்ட்ராங்காக இல்லை. ஹண்டர் பாடலின் பிஜிஎம், மனசிலாயோ பாடல், சில ஆக்ஷன் போர்ஷன் நன்றாக வந்துள்ளன. கதை தரமாக இருந்தாலும், திரைக்கதையும், மீண்டும் மீண்டும் வரும் காட்சிகளும் படத்துக்கு மைனஸ் தான். முதல் பாதி மட்டுமே ரசிக்க முடிகிறது, இரண்டாவது பாதியில் ஒன்றுமே இல்லை, வேட்டையன் ஆவரேஜ் மூவி என விமர்சித்துள்ளார்.
வேட்டையன் படத்தில், அறிமுக காட்சித் தவிர இரண்டே இடத்தில் தான் ரஜினி ரசிகர்கள் விசில் அடிக்கவே வாய்ப்புள்ளது. பான் இந்தியா அளவில் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா ஆகியோரை இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளனர். அமிதாப் கேரக்டர் எல்லாம் சுத்தமாக எடுபடவே இல்லை. பரோட்டா சூரி அல்லது சந்தானம் செய்ய வேண்டிய ரோலில் ஃபகத் பாஸிலை நடிக்க வைத்துள்ளனர். முக்கியமாக ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள மஞ்சு வாரியர், சூப்பர் ஸ்டாருக்கு மகள் போல இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
போலீஸ் ஆபிஸரான ரஜினிகாந்த், குற்றங்களை தடுக்க வேண்டுமென்றால் என்கவுன்டர் செய்வதில் தவறில்லை என நினைக்கிறார். ஆனால், அது தவறு என அமிதாப் பச்சன் போராட, இறுதியில் ரஜினியும் மனம் மாறுகிறார். அடிப்படையில் இது நல்ல கதை தான் என்றாலும், திரைக்கதை, ரஜினியின் கெட்டப் உட்பட எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை என ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர். மனசிலாயோ பாடல் மட்டுமே விஷுவலாக ரசிக்கும்படி உள்ளது, ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் ரஜினிக்காக ரிஸ்க்கே இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனிருத்தின் பின்னணி இசையும் பெரிதாக எந்த மேஜிக்கும் செய்யவில்லை என நெகட்டிவாக விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் வேட்டையன் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்களும் அதிகளவில் கிடைத்து வருகின்றன. கண்டிப்பாக இது சமூகத்துக்கு தேவையான கருத்து எனவும், ரஜினி கேரியரில் இது தான் பெஸ்ட் மூவி என்றும் ரசிகர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் கமர்சியல் ஹீரோ ரஜினியை, முக்கியமான சப்ஜெக்ட்டில் நடிக்க வைத்த இயக்குநர் தசெ ஞானவேலுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார். அதேபோல், வேட்டையன் கண்டிப்பாக 500 கோடி ரூபாய் வசூலிக்கும் எனவும் அவர் அடித்து கூறுகிறார். ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையன் ஏமாற்றமாக இருந்தாலும், ஃபேமிலி ஆடியன்ஸ்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






