மாநில கல்விக் கொள்கை ..முதல்வரிடம் அறிக்கை சமர்பித்த குழு.. என்னென்ன சிறப்பம்சம்
மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை டெல்லி நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில்,மாணவர்களுக்கு 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கூடாது. மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை டெல்லி நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில்,மாணவர்களுக்கு 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கூடாது. மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, மத்திய அரசால், புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவை விமர்சனத்திற்கு உள்ளாகின.
இந்நிலையில், மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கைக்கு மாற்றாக, தமிழக அரசின் சார்பில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில், 13 பேர் கொண்ட குழு 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்டது. இந்த குழுவானது 2023ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கூடுதலாக நான்கு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.
முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு இணைந்து கல்விக் கொள்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் ஆகியோரிடமிருந்து கருத்துருக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டன. இதில் இருந்து பரிந்துரைகளைத் தொகுத்து, மாநில கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாநில கல்விக் கொள்கைக்கான அறிக்கை இறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினிடம் மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை டெல்லி நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில்,மாணவர்களுக்கு 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கூடாது. மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் இருக்கக்கூடாது. கல்லூரி சேர்க்கையின்போது 12ஆம் வகுப்பு மதிப்பெண்களுடன் 11ஆம் வகுப்பு மதிப்பெண்களும் இடம்பெற வேண்டும். தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
What's Your Reaction?