உடன்பிறப்புகள் கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இடைத்தேர்தலில் நிற்கிறேன் - சீமான் பேச்சு
எங்கள் உடன்பிறப்புகள் எங்களை கைவிட்டு விடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இந்த இடைத்தேர்தலில் நிற்பதாகவும், கோட்டையை திறக்க ஒரே சாவி ஈரோடு கிழக்கிலிருந்து உதிக்கட்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
![உடன்பிறப்புகள் கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இடைத்தேர்தலில் நிற்கிறேன் - சீமான் பேச்சு](https://kumudamnews.com/uploads/images/202501/image_870x_6796e4c08540c.jpg)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைதேர்தலில் திமுக மற்றும் நாதக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே நேரடிப் போட்டி நடைபெறும் சூழலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து காளை மாடு சிலை அருகே அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசினார். வேட்புமனுத்தாக்கல், கடந்த ஜனவரி 17 ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ளது.
அப்போது , அரசியல் பதவிக்கானது அல்ல அது மக்களின் உதவிக்கானது என்றும் லஞ்சம் , ஊழல் , சாதிய தீண்டாமை , தெருவெங்கும் மது போதை தடுக்கமுடியவில்லை என்றும் கோடி கோடியாக கொட்டி தேர்தலை சந்திப்பார்கள் என்றார்.
எங்கள் உடன்பிறப்புகள் எங்களை கைவிட்டு விடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தேர்தலில் நிற்பதாகவும் , 4 ,5 சீட்டுக்களுக்காக திராவிட பன்றிகளிடம் மண்டியிடுவதை விட வேட்டையாட வேண்டும் என்று வேட்கையோடு இருக்கிறோம் என்றார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட மற்ற கட்சிகளுக்கு துணிவு இருக்கா என்று கேள்வி எழுப்பிய சீமான் அந்த துணிவு நாம் தமிழருக்கு இருக்கிறது என்றார்.
இந்த மண்ணை நிச்சயமாக வெல்வோம் என்றும் கோட்டையை திறக்க ஒரே சாவி ஈரோடு கிழக்கிலிருந்து உதிக்கட்டும் என்றும் ஈரோடு கிழக்குத்திலிருந்து புதிய விடியல் உருவானதாக வரலாறு எழுதுங்கள் என்றார். பணநாயகத்தை மீட்டு ஜனநாயகத்தை மீட்க ஒரு வாய்ப்பு தருங்கள் என்ற சீமான் கொடிய ஆட்சிக்கு வைக்க போகிற வோட்டு ஒரு ஓட்டு அது மைக் சின்னத்திற்கு வாக்களிங்கள் என்றார்.
முன்னதாக ஈரோடு பேருந்து நிலையம் அருகே கிழக்குத்தொகுதி நாம் தமிழர் கட்சிக்கான தேர்தல் பணிமனையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார்.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)