ஏவுதளத்திற்கு திரும்பாத சூப்பர் ஹெவி பூஸ்டர்.. எலான் மஸ்கிற்கு வந்த சோதனை

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் (Starship) சோதனை முறையில் அமெரிக்காவில் இன்று ஏவப்பட்டது.

Nov 21, 2024 - 01:39
Nov 21, 2024 - 02:21
 0
ஏவுதளத்திற்கு திரும்பாத சூப்பர் ஹெவி பூஸ்டர்.. எலான் மஸ்கிற்கு வந்த சோதனை
ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் 'ஸ்டாா்ஷிப்' (Starship) ராக்கெட் சோதனையை மேற்கொண்ட எலான் மஸ்க்

டெஸ்லா நிறுவன தலைவரான எலான் மஸ்க் அண்மைக் காலமாக பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஸ்பேஸ் எக்ஸின் கனவு திட்டமான எர்த்-எர்த் விண்வெளி பயணத்திட்டம் விரைவில் நனவாகும் என்றும் சமீபத்தில் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் லாஸ் ஏஞ்சல்-இல் இருந்து டோரன்டோவிற்கு 24 நிமிடத்திலும், லண்டனில் இருந்து நியூயார்கிற்கு 29 நிமிடத்திலும், டெல்லியில் இருந்து சான்பிரான்ஸிஸ்கோவிற்கு 30 நிமிடத்தில் பயணிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், விண்வெளிக்கு மனிதா்களை அழைத்து செல்லக்கூடிய, மீண்டும் பயன்படுத்தத்தக்க ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் 'ஸ்டாா்ஷிப்' (Starship) ராக்கெட் சோதனையை எலான் மஸ்க் மேற்கொண்டார். இந்த ராக்கெட்டானது சோதனை முறையில் செலுத்தப்பட்டதால் இதில் மனிதர்களோ, செயற்கை கோள்களோ இடம்பெறவில்லை.

இந்த சோதனையானது தற்போது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுப்பட்டுள்ள டொனால்ட் டிரம் உள்ளிட்ட பலர் முன்னிலையில் நடைபெற்றது. சோதனையின் போது 71 மீட்டர் கொண்ட முதல் உந்து நிலையான சூப்பர் ஹெவி பூஸ்டர் இரண்டாவது கட்டமான ஸ்டார்ஷிப்பில் (Starship) இருந்து பிரிந்து விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது.

இருப்பினும், சூப்பர் ஹெவி பூஸ்டர் திட்டமிட்டபடி ஏவுதளத்திற்கு திரும்புவதற்கு பதிலாக மெக்ஸிகோ வளைகுடாவில் மூழ்கியது. இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சோதனையின் போது சூப்பர் ஹெவி பூஸ்டரான திட்டமிட்டபடி மீண்டும் திரும்பியது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் சமீபத்தில் நவம்பர் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது எலான் மஸ்க், எக்ஸ் தளத்தின் மூலம் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் இதனால் தான் டொனால்ட் டிரம், தனது அமைச்சரவையில் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்கை அரசாங்கத் திறன் துறையை வழிநடத்துவார் என்று அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் சோதனை ஓட்டத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டுள்ளது இந்த தகவல்களை உறுதிப்படுத்துவதாக சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow