Savukku Shankar Case: சவுக்கு சங்கர் வழக்கு – அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்
நில அபகரிப்பு வழக்கில் யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நில அபகரிப்பு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய்யானது என தனது யூ டியூப்பில் சேனலில் பேட்டியளித்து, தவறான தகவல்களை பரப்பியதாக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர், சவுக்கு சங்கர் தொடர்ந்து இது போன்று தவறான தகவல்களை அளித்து வருவதாக கூறினார். இதனையடுத்து, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
What's Your Reaction?