New Year 2025: அரசியல் தலைவர்களின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்..!
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கும், தங்களது தொண்டர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
2024 வருடம் முடிவடைந்த நிலையில், 2025 இனிதே தொடங்கியுள்ளது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும், புத்தாண்டு களைக்கட்டியுள்ளது. வானவேடிக்கை, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, கேக் வெட்டுவது, ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை வரவேற்று வருகின்றனர். குழந்தைகள் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து வரும் வேளையில், குறிப்பாக பெண்கள் வீட்டு வாசல்களில் கோலம் போட்டு மகிழ்ந்தனர். இந்தநிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களும் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கும், தங்களது தொண்டர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புத்தாண்டு வாழ்த்துலைவர் திரௌபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில்,"அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், செழிப்பையும் தரட்டும்! இந்தச் சந்தர்ப்பத்தில், இந்தியாவிற்கும் உலகிற்கும் ஒளிமயமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக இணைந்து பணியாற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகளையும், வெற்றிகளையும், முடிவில்லாத மகிழ்ச்சியையும் தரட்டும். அற்புதமான ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “புதிய ஆண்டில் புதிய நம்பிக்கைகள் பிறக்கட்டும். 2025 புத்தாண்டில் உதய சூரியன் உதயமாகும்போது, அன்பு, சமத்துவம் மற்றும் முன்னேற்றத்துடன் 2024 இன் வெற்றிகளைக் கட்டியெழுப்புவோம். அனைவருக்கும் ஒற்றுமை மற்றும் சாத்தியங்கள் நிறைந்த புத்தாண்டாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
2025 புத்தாண்டு வாழ்வில் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும்; சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு நம்மை அர்ப்பணிப்போம்" தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
"புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற புத்தாண்டு, அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்" என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “ புதிதாக பிறந்த புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம். விவசாயிகள், தொழிலாளர்களின் நலனை காப்போம். மாற்று திறனாளிகள், முதியோர்களை பாதுகாப்போம், உண்மையான சமூக நீதியிடன் சமத்துவ நிறைந்த தமிழ்நாட்டை அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடம் அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ள வாழ்த்து செய்தியில், 2025ல் நாம் அடியெடுத்து வைக்கும் இத்தருணம், இப்பாதையை நமதாக்கிக்கொண்டு ஒரு சிறந்த அத்தியாயத்தை எழுதுவதற்கான நேரம். புத்தாண்டு என்பது காலத்தால் முன்னால் போவது என்பது மாத்திரமல்ல; ஞானத்தோடு, உறுதியோடு, நமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக்கொள்ளத் தயார் நிலையோடு முன்னோக்கி நகர்வது. நமது நல்ல கனவுகளை நனவாக்கும் ஆண்டாக இப்புத்தாண்டை ஆக்குவோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “தமிழக மக்கள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக, இனிய 2025 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் ஆட்சியில், முன்னெப்போதுமில்லாத வகையில், நம் நாடு, உலகின் முன்னோடியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் முதன்மையான நாடாக இருக்கிறோம்.
உற்பத்தி, விவசாயம், வானியல் ஆராய்ச்சி, விளையாட்டு, தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும், நமது நாடு பல மடங்கு முன்னேறியிருக்கிறது. இந்த ஆண்டு, உலக அளவில், பொருளாதாரத்தில் நான்காவது இடத்திற்கு நாம் முன்னேறவிருக்கிறோம். இவை அனைத்தும், மக்கள் நலனை நோக்கமாகக் கொண்ட, ஊழலற்ற நல்லாட்சியால் மட்டுமே சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது.” என குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?