ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்றம்... எதிர்கட்சிகள் கடும் அமளி..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி,  மத்திய  சட்டத்துறை  அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்

Dec 17, 2024 - 13:50
 0
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்றம்... எதிர்கட்சிகள் கடும் அமளி..!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்றம்... எதிர்கட்சிகள் கடும் அமளி..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது; அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்; மாநில அரசுகளின் பதவிக் காலத்தை குறைக்க அதிகாரம் எதுவும் இல்லை எனவும் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட கட்சிகள் லோக்சபாவில் இந்த மசோதாவுக்ககு எதிர்ப்புத் தெரிவித்து உடனே வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 

மணீஷ் திவாரி காங்கிரஸ் எம்.பி

கூட்டாட்சி முறைக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்தை அழிப்பதற்கான நடவடிக்கை பாஜக அரசு மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார். சட்டப்பேரவைகளின் ஆட்சிக்காலத்தை நிர்ணயிப்பதை அனுமதிக்க முடியாது. மத்திய அரசு உடனடியாக மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி எம்.பி தர்மேந்திர யாதவ்

காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜனநாயகக் கட்டமைப்பை இச்சட்டம் உடைக்கிறது. மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மையை இச்சட்டம் கேள்விக்கு  உள்ளாக்குகிறது. அம்பேத்கரின் அரசியலமைப்பை முற்றிலுமாக அழிக்க முயற்சி நடப்பதாக சமாஜ்வாதி எம்.பி தர்மேந்திர யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். 

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை அரசியலமைப்பு வைரஸ் போன்றது. அரசியலமைப்புக்கு எதிரான இம்மசோதா செல்லுபடியாகாது. அனைத்து அதிகாரத்தையும் ECI இடம் கொடுத்து விட முடியுமா?  சட்டப்பேரவை அதிகாரங்களுக்கு தலையிட இம்மசோதா வழிவகை செய்வதை அனுமதிக்க முடியாது. தனிமனித அதிகாரத்துக்காக மட்டுமே இம்மசோதா கொண்டு வரப்படுகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு

அரசியலமைப்பு, கூட்டாட்சி தன்மையை கொலை செய்யும் நடவடிக்கை என்றும், 
 அரசுக்கு 3க்கு 2 பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் எப்படி இம்மசோதாவை தாக்கல் செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ள நிலையில், நாடாளுன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு இம்மசோதா அனுப்பப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

சந்திரசேகர் மத்திய இணையமைச்சர்

அசாதுதீன் ஓவைசி AIMIM எம்.பி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
இந்த மசோதா வாக்களிக்கும் உரிமைக்கு எதிரானது என்றும்,  ஜனநாயக சுயாட்சியை ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீறுவதாக குற்றம் சாட்டினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow