சி.எஸ்.கே-வுக்கு 156 ரன்களை இலக்காக நிர்ணயித்த மும்பை
156 ரன்கள் இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 156 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி
ஐபிஎல் திருவிழா
18வது ஐபிஎல் திருவிழா நேற்று கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், தொடரின் 2 லீக் ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது.அதில் ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ்
இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் ரோகித் சர்மா கலீல் அகமது பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். இதனால் மும்பை ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
Read more: ராஜஸ்தானை வீழ்த்தி அசத்தல்...தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஐதராபாத்
அடுத்தடுத்து வந்த மும்பை வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு மும்பை அணி 155 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் பந்துவீச்சாளர் நூர் அகமது 4 விக்கெட்டுகளும், கலீல் அகமது 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து 156 ரன்கள் இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.
What's Your Reaction?






