முதல் மேட்ச் எப்பவும் சாமிக்கு.. 12 வருஷமா மும்பை அணிக்கு தொடரும் சோதனை!

கடந்த 17 ஐபிஎல் சீசன்களில் மொத்தமே 3 முறை தான் லீக் போட்டியில் தான் விளையாடிய முதல் ஆட்டத்தில் வென்றுள்ளது மும்பை அணி.

Mar 19, 2025 - 17:49
 0
முதல் மேட்ச் எப்பவும் சாமிக்கு.. 12 வருஷமா மும்பை அணிக்கு தொடரும் சோதனை!
mumbai indians opening game history in ipl timeline

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினை வருகிற 23 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்க்கொள்ள உள்ளது. விடாது கருப்பு என்பது போல கடந்த 12 வருஷமா ஐபிஎல் தொடரில் தான் விளையாடும் முதல் போட்டியில் தோற்றுக் கொண்டே இருக்கிறது மும்பை இந்தியன்ஸ்.

இந்த வருஷமாவது தன் மேல் படிந்திருக்கும் கறையை துடைத்து எறியுமா? என்றால் கேள்விக்குறி தான். காரணம் முதல் போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர வீரர்களான பும்ரா, ஹார்த்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு எதிரான போட்டியில் சூர்யக்குமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 முறை சாம்பியன்.. கைக்கொடுக்காத அதிர்ஷ்டம்:

லப்பர் பந்து படத்தில் ஒரு டையலாக் வரும்..” என் மாப்ள முதல் பந்தை எப்பவும் சாமிக்கு விட்ருவான்..அடுத்து எல்லா பந்தும் அவனுடைய ஆட்டம் தானு”. கிட்டத்தட்ட மும்பை அணி இப்படிதான். கடந்த 17 ஐபிஎல் சீசன்களில் மொத்தமே 3 முறை தான் லீக் போட்டியில் தான் விளையாடிய முதல் ஆட்டத்தில் வென்றுள்ளது. 14 முறை தொடரில் விளையாடும் முதல் போட்டியில் தோல்வியுற்றாலும், 5 முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

சென்னை ரசிகர்கள் செல்லமாக மும்பை அணியினை பங்காளி என்று அழைப்பார்கள். அந்த வகையில் வருகிற 23 ஆம் தேதி பங்காளிக்கு எதிரான போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். மும்பை அணி ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் சந்தித்த முதல் போட்டி குறித்த தகவல் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

  • IPL 2008
    Opponent: Royal Challengers Bangalore (RCB)
    Result: தோல்வி
  • IPL 2009
    Opponent: Chennai Super Kings (CSK)
    Result: வெற்றி
  • IPL 2010
    Opponent: Rajasthan Royals (RR)
    Result: வெற்றி
  • IPL 2011
    Opponent: Delhi Daredevils (now Delhi Capitals)
    Result: வெற்றி

  • IPL 2012
    Opponent: Chennai Super Kings (CSK)
    Result: வெற்றி 
  • IPL 2013
    Opponent: Royal Challengers Bangalore (RCB)
    Result: தோல்வி
  • IPL 2014
    Opponent: Kolkata Knight Riders (KKR)
    Result: தோல்வி
  • IPL 2015
    Opponent: Kolkata Knight Riders (KKR)
    Result: தோல்வி
  • IPL 2016
    Opponent: Rising Pune Supergiants (RPS)
    Result: தோல்வி

  • IPL 2017
    Opponent: Rising Pune Supergiants (RPS)
    Result: தோல்வி
  • IPL 2018
    Opponent: Chennai Super Kings (CSK)
    Result: தோல்வி
  • IPL 2019
    Opponent: Delhi Capitals (DC)
    Result: தோல்வி
  • IPL 2020
    Opponent: Chennai Super Kings (CSK)
    Result: தோல்வி
  • IPL 2021
    Opponent: Royal Challengers Bangalore (RCB)
    Result: தோல்வி
  • IPL 2022
    Opponent: Delhi Capitals (DC)
    Result: தோல்வி
  • IPL 2023
    Opponent: Royal Challengers Bangalore (RCB)
    Result: தோல்வி
  • IPL 2024
    Opponent: Rajasthan Royals (RR)
    Result: தோல்வி

மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்த்தனே இன்று பத்திரிக்கையாளர்களே சந்தித்தார். அப்போது, “2012-க்குப் பிறகு நாங்கள் (மும்பை அணி) எங்கள் முதல் ஆட்டத்தில் வெற்றி பெறவில்லை என்பதை சில நாட்களுக்கு முன்பு எனக்கு நினைவூட்டினார்கள். முதல் ஆட்டத்தில் கேப்டனாக அணியை வழிநடத்தப் போகும் சூர்யா உட்பட, நானும் இதனை ஒரு பெரிய சவாலாக எதிர்க்கொள்ள காத்திருக்கிறோம்." என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow