ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளது.. அமைச்சர் சேகர் பாபு 

மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Dec 29, 2024 - 10:57
 0
ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளது.. அமைச்சர் சேகர் பாபு 
2025-ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியானது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெய்வ திருவுருவ படங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 2025-ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியினை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ( நிர்வாகம்) சுகுமார் மற்றும் கூடுதல் ஆணையர் ( கல்வி ) ஹரிபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது,  திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே 2023 -2024 ஆகிய ஆண்டுகளில் நாட்காட்டி வெயிடப்பட்டுள்ளது. அதேபோல வரும் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆயிரத்து 200 பெரிய நாட்காட்டியும், 25 ஆயிரம் சிறிய நாட்காட்டியும் தயார் செய்யப்பட்டு திருக்கோயிலில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. 

கடந்த ஆண்டுகளில் சிறிய நாட்காட்டிகள் மூலம் ஆறு லட்சம் கூடுதல் வருவாய் கிடைத்தது. பெரிய நாட்காட்டிகள் தயாரிக்கப்பட்டு அரசு அலுவலகங்களுக்கு கொடுக்கப்பட்டது. அதன் தயாரிப்பு செலவிலனம் போக மீதம் மூன்று லட்சம் திருக்கோயிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது.  திருக்கோயிலுக்கு  காணிக்கையாக பெறப்படுகிற பலமாற்று பொன்இனங்களை ஒய்வு பெற்ற நீதிபதிகளை வைத்து மறுபயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

ஆண்டிற்கு 6 கோடியே 31 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியில் வைக்கப்படும். முன்பு 639 கிலோ தங்கங்கள் தான் வைப்பு நிதியில் வைக்கப்பட்டது. ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பத்து கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது.
கடந்த காலங்களில் இந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டது போல் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. 

38 மாவட்டங்களுக்கு அறக்காவலர் குழு அமைத்துள்ளோம்.  அறகாவலர்கள் நியமனத்தில் பல நிபந்தனைகள் உள்ளது. சட்டதிட்டத்திற்கு உட்பட்டு நேர்மையான திருக்கோயிலுக்கு பணியாற்ற கூடிய நபர்களை நியமனம் செய்ய அரசு பணியாற்றி வருகிறது. 20 ஆயிரம் திருக்கோயிலுக்கு அறங்காவலர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளது. திருக்கோவில்களில் கூடுதலாக சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. 

 1925- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சட்டத்தின்படி 1959-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைத்துறை உருவாக்கப்பட்ட பிறகு இந்த சட்டத்தின் உடைய இறுதி வடிவம் 1959-ல் இறுதிச் செய்யப்பட்டது. அதன்படி, செயல்பாடுகள் உள்ளது. அறநிலையத்துறை சட்டம் உருவாக்கப்பட்டு 65 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சட்டவிதிகளில் மாற்றம் செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வல்லுநர்கள் உடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். 

பழனியில் முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இரவு 8 மணி வரை தான் இயக்கப்படுகிறது என்பது குறித்தான கேள்விக்கு, தைப்பூசத்தில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். இதனால், இயந்திரங்களின் கொள்ளவு மற்றும் தன்மையை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்த பிறகு இரவு நேரங்களில் ரோப் கார் சேவை அதிக நேரத்திற்கு செயல்படுத்தப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow