மஹா சிவராத்திரி... சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Feb 26, 2025 - 13:13
 0
மஹா சிவராத்திரி... சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!
மஹா சிவராத்திரி... சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!

விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயில் ஆனது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு  கடந்த காலங்களில்  தினந்தோறும்  பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்  10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர். இதனை அடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாசி மாத பிரதோஷம், மகா சிவராத்திரி மற்றும் அமாவாசையை  முன்னிட்டு   25ஆம் தேதி முதல் வரும் 28ஆம் தேதி வரை மொத்தம் நான்கு நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

இந்த நிலையில் மஹா சிவராத்திரியை  தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து  வருகை தந்த பக்தர்கள் கோயில் அடிவாரப் பகுதியில் அடிவாரப் பகுதியில் குவிந்தனர்.பின்னர் காலையில்  கோயில் நுழைவாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் காலை 6 மணி முதல் 12 மணி மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மஹாசிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது .இன்று பக்தர்கள் இரவில் தங்கி வழிபடுவார்கள் என கூறப்படுகிறது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow