தமிழ்நாடு

தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா... 3000 தொண்டர்களுக்கு அனுமதி...!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று (பிப்.26)  மகாபலிபுரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்நிகழ்வில் பங்கேற்க 3000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா... 3000 தொண்டர்களுக்கு அனுமதி...!
தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா... 3000 தொண்டர்களுக்கு அனுமதி...!

மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று (பிப்.26) தொடங்கியது. இதில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து வரும் 2,500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில், தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தவெக தொண்டர்கள், வழிநெடுகிலும் விஜய்க்கு தவெக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பை கொடுத்தனர்.  தவெக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி சீட்டை பரிசோதனை செய்த பின்னரே தவெக நிர்வாகிகளுக்கு விழா நடைபெறும் அரங்கிற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. 

த.வெ.க. 2 ஆம் ஆண்டு விழாவில் கட்சித் தலைவர் விஜய்யை போற்றி தனிப்பாடல் பாடப்பட்டது. கண்டா வரச்சொல்லுங்க புகழ் கிடாக்குழி மாரியம்மாள் விஜய்யை போற்றி தனிப்பாடலை பாடினார். தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவில் பொய்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என களைக்கட்டிய நிகழ்ச்சிகளை தொண்டர்கள் ரசித்தனர். 

நீலாங்கரை இல்லத்தில் இருந்து பூஞ்சேரிக்கு வந்த விஜய்க்கு தவெக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த மும்மொழி கொள்கைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையில் கையெழுத்திட்டு, #GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த கையெழுத்திட்ட பிறகு,  #GetOut கையெழுத்து இயக்கத்தில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட புஸ்ஸி ஆனந்த் அழைப்பு விடுத்த நிலையில் அவர் மறுப்பு தெரிவித்தார்.

ஒருவர் பாட்டுப் பாட, மற்றொருவர் அதற்கு ஏற்ற ஒத்திசைவுடன் நடனமாட திரைமறைவு கூட்டுக் களவாணிகள் இருவரும் தமிழக மக்களின் பிரச்சினைகளை இருட்டடிப்புச் செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து வருகின்றனர்.

புதிய கல்வி கொள்கை, மும்மொழி திட்ட திணிப்போடு சேர்த்து முக்கிய அவலங்களை எதிர்த்து போராட இவர்களை #GETOUT செய்திட உறுதி ஏற்போம். விமர்சனத்துக்கு அஞ்சி கொடுங்கோலுடன் மக்களின் குரல்களை ஒடுக்கும் கோழைத்தனம்” இவ்வாறு அந்த பதாகையில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

தவெக விழா நிகழ்ச்சியை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜ்மோகன் தொகுத்து வழங்கினார். கட்சி முதல் மாநாட்டில் தொகுப்பாளினியின் குரல் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.  விழாவில் எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தவிர்க்க,  ஆம்புலன்ஸ்களும் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.