நான் பார்த்துக்கிறேன்.. செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அசராமல் பதிலளித்த பவன்கல்யாண்
பழநியிலிருந்து திருப்பதிக்கு தினமும் பேருந்து இயக்க ஆந்திரா போக்குவரத்துக்கழகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், பழநியிலிருந்து திருப்பதிக்கு ரயில் சேவை தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன் என நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்தார்.
பழநியிலிருந்து திருப்பதிக்குத் தினமும் பேருந்து இயக்க ஆந்திரா போக்குவரத்துக்கழகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், பழநியிலிருந்து திருப்பதிக்கு ரயில் சேவை தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு நடப்பதாக இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக இருந்து கூறி வருகிறேன். தவறு செய்தது யார் எனத் தெரிய வந்துள்ளது. கடவுளிடம் யாரும் இப்படிச் செய்யக் கூடாது. எப்போதும் எனக்காக நான் கடவுளிடம் வேண்டிக்கொள்வது இல்லை. தமிழகத்துக்கும், மக்களுக்கும், தேசத்துக்கும் நல்லது நடக்கட்டும்” என்று அவர் கூறினார்.
What's Your Reaction?






