அமெரிக்க தேர்தலும்...செவ்வாய்கிழமையும்.. வரலாறு சொல்வது என்ன?

அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செவ்வாய்கிழமையான நேற்று ( நவம்பர் 5) நடைபெறுகிறது. அமெரிக்காவின் 46வது, 45வது அதிபர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் செவ்வாய்கிழமை அன்றே நடைபெற்றது. கடந்த 179 ஆண்டுகளாக நடந்த அதிபர் தேர்தல் அனைத்தும் செவ்வாய் கிழமைகளில் தான் நடத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும், செவ்வாய்கிழமைக்கும் இருக்கும் பந்தம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

Nov 7, 2024 - 07:09
 0
அமெரிக்க தேர்தலும்...செவ்வாய்கிழமையும்.. வரலாறு சொல்வது என்ன?

தேர்தல் ஆண்டு என்றே அழைக்கப்படுகிறது 2024ம் ஆண்டு. இந்த ஆண்டில் மட்டும் இந்தியா உள்பட 60 நாடுகள் தேர்தல்களை நடத்தி முடித்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே நவம்பர் 5ம் தேதியான இன்று அமெரிக்க தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். ஆளும் புதுசு, ஆட்சியும் புதுசு என ஒரு ஒரு தேர்தல்களிலும் ஒரு ஒரு விஷயம் மாறினாலும், கடந்த 175 ஆண்டுகளில் ஒரு கலாச்சாரத்தை மட்டும் மாற்றாமல் தேர்தலை நடத்துகிறது அமெரிக்க. 175 காலமாக செவ்வாய்கிழமைகளில் மட்டுமே தேர்தலை நடத்தும் வழக்கம் அமெரிக்காவில் இருந்துவருகிறது. 

ஜூலை 4, 1776ம் ஆண்டில் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாடாக தன்னை அறிவித்துக்கொண்டது அமெரிக்கா. இதன் அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைக்கப்பட்டு அது 1778ம் ஆண்டில் முன்மொழியப்பட்டது. இதனையடுத்து அமெரிக்காவின் முதல் தேர்தல் 1788ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து 1789 ஜூன் மாதம் வரை என 6 மாதங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இப்படி நடந்த தேர்தல்களில் சில முறைகேடுகள் நடந்ததால் இதனை மாற்றியமைக்க குரல்கள் வலுத்தது. 

1844.. அமெரிக்க தேர்தலுக்கான வாக்குப்பதிவை ஒரே நாளில் நடித்தி முடிக்க அலெக்ஸ்சாண்டர் டங்கன் தலைமையில் தீர்மானத்தை இயற்றி அனுப்பியது வெள்ளை மாளிகை. ஆனால், 1844 தேர்தலுக்கு முன்பு அமெரிக்க செனட் அதை ஏற்க்கவில்லை. இந்த தீர்மானத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டும் மீண்டும் அதை அனுப்பினார் டங்கன். இந்த முறை, அமெரிக்க அதிபர் தேர்தலை ஒரே தினத்தில் நடத்த செனட் ஒப்புதல் அளித்தது. நவம்பர் மாதத்தின் முதல் திங்கள்கிழமைக்கு பின்வரும் முதல் செவ்வாய்கிழமையில் அதிபர் தேர்தலை நடத்தலாம் என 1845ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி சட்டமாக வரையறுக்கப்பட்டது.

ஆனால், செவ்வாய்கிழமையை தேர்தெடுத்தற்கான காரணம் என்ன என்பது சற்று புதிராகவே இருந்தது. 19ம் நூற்றாண்டில் அமெரிக்கர்களில் வாழ்வியல் முறையே இதற்கான காரணமாக இருக்கிறது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1800களில் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டிருந்தனர் அமெரிக்கர்கள். நவம்பர் மாதம் அறுவடை முடிந்திருக்கும் காலம் என்பதால் விவசாயிகள் வாக்களிக்க வசதியாக இருக்கும் என கருதப்பட்டது. இதற்கு பின் மதத்திற்கு தொடர்பான காரணங்களும் இருந்தன. அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாண்மையினரான கிருஸ்துவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலையங்களுக்கு செல்லும் வழக்கத்தை கொண்டிருந்தனர். இதனால் திங்கட்கிழமையில் வாக்குப்பதிவை நடத்த அரசு விரும்பவில்லை.

அந்த காலத்தில் கார் போன்ற போக்குவரத்து வசதி பெரிதும் இல்லாததால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வெகு நேரமாகும். இதனால் திங்கட்கிழமையில் வாக்குப்பதிவை நடத்தினால் ஞாயிறு வழிபாட்டை விட்டுவிட்டு வாக்குப்பதிவுக்காக  மக்கள் பயணம் மேற்கொள்ள நேரிடும் என கருதப்பட்டது. இதனால், செவ்வாய்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டது.

இப்படி காலம் காலமாக இருந்து வரும் ஒரு வழக்கத்தை தற்போது மாற்றக்கோரி அழுத்தம் தந்து வருகின்றனர் அரசியல் வல்லுனர்கள். வார நாட்களில் தேர்தல் நடத்தப்படுவதால் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவதாக ஒரு கருத்து வைக்கப்பட்டு வருகிறது. இதனால், வாக்குப்பதிவை வார இறுதிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற முழக்கம் 2005களில் இருந்து ஒளித்துக்கொண்டிருக்கிறது. 175 ஆண்டுகளாக இருந்து வரும் செவ்வாய்க்கிழமை கலாச்சாரம் மாற்றப்படுமா? பொருத்திருந்து பார்க்கலாம்....

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow