சேவாக்கிற்கு அடுத்து இவர்தான்.. முச்சதத்தில் சாதனை படைத்த இங்கிலாந்து வீரர்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்ததன் மூலம், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் அபார சாதனைகளை படைத்துள்ளார்.

Oct 11, 2024 - 00:06
Oct 11, 2024 - 00:10
 0
சேவாக்கிற்கு அடுத்து இவர்தான்.. முச்சதத்தில் சாதனை படைத்த இங்கிலாந்து வீரர்

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, அக்டோபர் 7ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 556 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஷான் மசூத் 151 ரன்களும், சல்மா அகா 104 ரன்களும், அப்துல்லாஹ் ஷஃபீக் 102 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில். ஜாக் லீச் 3 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடன் கர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஓலி போப் டக்-அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து ஜாக் கிராவ்லி 78 ரன்களிலும் [85 ரன்கள்], அதிரடியாக ஆடிய பென் டக்கெட் 75 பந்துகளில் 84 ரன்களிலும் வெளியேறினார்.

அதன் பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இணை பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்தது. அட்டகாசமாக ஆடிய ஜோ ரூட் தனது 6ஆவது இரட்டை சதத்தையும், பாகிஸ்தானுக்கு எதிரான 2வது இரட்டை சதத்தையும் பதிவு செய்தார். அதே சமயம் அதிக இரட்டை சதங்கள் அடித்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தை [முதலிடத்தில் வால்டர் ஹம்மண்ட் உள்ளார்] பிடித்தார். மேலும், சர்வதேசப் போட்டிகளில் 20ஆயிரம் ரன்களை கடந்த 13வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

அவரை தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஹாரி புரூக் 310 பந்துகளில் முச்சதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிவேக முச்சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். முதலில் இந்தியாவின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவக் (309 பந்துகள்) முதலிடத்தில் உள்ளார்.

பின்னர், ஜோ ரூட் 262 ரன்களிலும், ஹாரி புரூக் 317 ரன்களிலும் வெளியேறினர். இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 454 ரன்கள் எடுத்தனர். இதுவே 4ஆவது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகப்பட்ச ரன்கள் ஆகும். இதற்கு முன்னதாக, 1957ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸின் பீட்டர் மே மற்றும் கொலின் கோவ்ட்ரே இருவரும் இணைந்து 411 ரன்கள் எடுத்தத்ஹே சாதனையாக இருந்தது.

அதேபோல், பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடிக்க ஒரு ஜோடியின் அதிகப்பட்சமாகும். முன்னதாக, 1958ஆம் ஆண்டு கோனர்ட் ஹண்டே மற்றும் கேரி சோபர்ஸ் இணை 446 ரன்கள் அடித்ததே அதிகப்பட்சமாகும். அதேபோல், இரண்டு பேட்ஸ்மேன்கள் 250 ரன்களுக்கு மேல் அடிப்பது இது மூன்றாவது நிகழ்வாகும். முன்னதாக, வெஸ்ட் இண்டீஸின் கோனர்ட் ஹண்டே மற்றும் கேரி சோபர்ஸும், இலங்கையின் மஹிலா ஜெயவர்த்தனே மற்றும் குமார் சங்ககராவும் ஒரே இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

இறுதியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 823 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதன் பின் தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 4ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. இன்னும் 115 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி வெற்றிபெறுவது கடினமானதாகவே இருக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow