போதைப்பொருள் வழக்கு.. ஐந்து பேர் அதிரடி கைது.. உபகரணங்கள் பறிமுதல்
சென்னை வளசரவாக்கம் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள், நான்கு போதை மாத்திரைகள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பெருநகர காவல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (ANIU) தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் R-9 வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து ஜனவரி 23-ஆம் தேதி வளசரவாக்கம், ஆற்காடு சாலை, மாநகராட்சி அலுவலகம் அருகில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் கஞ்சா வைத்திருந்த சுபாஷ், கார்த்திக், அரவிந்த் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடமிருந்து 6 கிராம் எடை கொண்ட மெத்தபெட்டமைன், 10 கிராம் கஞ்சா போதைப்பொருள், 3 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க: பாழடைந்த கட்டடத்தில் சிக்கிய மாணவிகள்... இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய விக்னேஷ் என்பவரை ஜனவரி 24-ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கிராம் மெத்தபெட்டமைன், இரண்டு Ectasy போதை மாத்திரைகள், இரு ஐபோன் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். தொடர்ந்து, R-9 வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் ஜஸ்வீர் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஐந்து கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள், நான்கு Ectasy போதை மாத்திரைகள், 20 கிராம் கஞ்சா போதைப்பொருள், மெத்தபெட்டமைன் பயன்படுத்த உதவும் OCBC உபகரணம் மற்றும் இரண்டு செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட குற்றவாளி ஜஸ்வீர் விசாரணைக்குப் பின்னர் நேற்று (ஜன 26) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி வழக்கில் இதுவரை மொத்தம் ஐந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு மொத்தம் 14 கிராம் மெத்தபெட்டமைன், 30 கிராம் கஞ்சா போதைப்பொருள், ஆறு Ectasy மாத்திரைகள், ஒரு ஐபோன் உட்பட ஆறு செல்போன்கள், 35 ஆயிரம் பணம் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?