பாழடைந்த கட்டடத்தில் சிக்கிய மாணவிகள்... இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது
சென்னையில் மூன்று பள்ளி மாணவிகளை கடத்திச் சென்றதாக மூன்று இளைஞர்கள் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூரை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அந்த புகாரில், தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் தனது 13 வயது மகள் காணவில்லை என தெரிவித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் திரு.வி.க நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிறுமி 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது பள்ளி தோழி மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி தோழியுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் 3 ஆண் நண்பர்களுடன் முதலில் ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு பிறகு மீண்டும் சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு அருகே உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கி விட்டு அதே பகுதியில் உள்ள பாழடைந்த ஒரு பழைய கட்டிடத்தில் இரவு முழுவதும் திரு.வி.க நகர் பகுதியில் தங்கி இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மாணவிகளின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் அவர்களை மீட்டனர். அந்த பாழடைந்த கட்டிடத்தில் அந்த மாணவிகளுடன் தனிமையில் இருந்த பொழுது அதற்கு காவலாக மூன்று சிறுவர்களை அழைத்து வந்து காவல் காக்க நிற்க வைத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்த வழக்கு திரு.வி.க நகர் காவல் நிலையத்திலிருந்து இருந்து, செம்பியம் அனைத்து மகளிர் காவல்துறைக்கு மாற்றப்பட்டது. பின்னர் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பள்ளி மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த மருத்துவ பரிசோதனை அடுத்து மாணவிகளை காவல்துறையினர் மயிலாப்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான காப்பகத்தில் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து இது குறித்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமிகளை கடத்திச் சென்ற கொடுங்கையூரை சேர்ந்த கலிமுல்லா (21), அகரம் பகுதியை சேர்ந்த அபிஷேக் (19) மற்றும் கோகுல் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் என மொத்தம் ஆறு பேர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிறுவர்களை சென்னை கெல்லீஸ் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்த போலீசார் மற்ற மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?