Fengal Cyclone: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்... தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை....
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இரவு 7.30 மணிக்குள் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, (நவ.26 ) நேற்று காலை 08.30 மணியளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 530 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் தென்கிழக்கு திசையில் இருந்து 450 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 350 கிலோமீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையிலிருந்து கிழக்கே 110 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 6 மணி நேரத்தில் (இரவு 7.30 மணிக்குள்) புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து தெற்கே-தென்கிழக்கே 590 கிமீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 710 கிமீ தெற்கே-தென்கிழக்கே தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 800 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து நவம்பர் 27-ம் தேதி புயலாக மாறும் என கூறப்படுகிறது.
புயல் கரையை கடக்கும் வேளையில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான - கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழக கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இரவு 7.30 மணிக்குள் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சின்னம் சென்னையில் இருந்து, 530 கி.மீ தொலைவில் உள்ளது. புயல் நகரும் வேகம் 13 கி.மீட்டரில் இருந்து 10 கி.மீட்டராக குறைந்துள்ளது. தாழ்வு மண்டலம் நகரும் வேகம் மணிக்கு 13கி மீ-ல் இருந்து 10 கி.மீ-ஆக குறைந்ததுள்ளதாக தெரிவித்துள்ளது.
What's Your Reaction?