வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் பதிவு
நடிகை கீர்த்தி சுரேஷ், தனது காதலன் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமார், நடிகை மேனகா தம்பதியின் மகள் கீர்த்தி சுரேஷ். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
பின்னர், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் கீர்த்தி சுரேஷிற்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
இதையடுத்து, தொடரி, ரெமோ, சர்க்கார், சாணிக் காகிதம், பெண்குயின் ஆகிய படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் கீர்த்தி சுரேஷ் நீங்கா இடம் பிடித்தார். தற்போது தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான 'பேபி ஜான்' மூலம் பாலிவுட்டிலும் கால்பதிக்க உள்ளார்.
இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தனது பள்ளி நண்பரான ஆண்டனி என்பவரை 15 வருடமாக காதலித்து வருவதாகவும், இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் வரும் டிசம்பர் 12-ம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் அன்று கோவாவில் இவர்களுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த காதல் வதந்தியை உறுதி செய்யும் வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, '15 ஆண்டுகளை கடந்துவிட்டோம். எப்போதும் தொடரும்' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் கீர்த்தி சுரேஷிற்கு வாழ்த்து தெரிவித்தாலும், பலர் ’உங்க கல்யாணம் எந்த ஓடிடில வரும்?’ என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், கீர்த்தி சுரேஷ் தனது காதலன் மற்றும் அவரின் பெயரை சேர்த்து தான் தனது நாய்க்கு NYKE என பெயர் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.
What's Your Reaction?