சீட்டுக்காக எம்புட்டு அலப்பறை..?.. கீழே படுத்த போதை ராஜாக்கள்.. மல்லுக்கட்டி போராடிய போலீஸ்..

மதுபோதையில், அப்பாவும் மகனும் சேர்ந்து பேருந்து நிலையத்தில் அலப்பறை செய்ததோடு,போலீசாரையும் புலம்பவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Oct 6, 2024 - 00:57
 0

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில்தான் இப்படி ஒரு வினோத காட்சி அரங்கேறி இருக்கிறது. உடலில் ரத்தம் வழிய உடும்புப் பிடியாய் பேருந்தை பிடித்துக் கொண்டு மல்லுக்கட்டிய நபர் நிர்மல். அவரது பக்கத்திலேயே பையுடன் அமர்ந்திருப்பவர் நிர்மலின் தந்தை பன்னீர்செல்வம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த இருவரும் சேலம் மாவட்டம் ஏற்காடு செல்வதற்காக விருத்தாசலம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனர்.
அங்குள்ள டாஸ்மாக்கில் அப்பாவும், மகனும் ஒன்றாக சரக்கு அடித்தபின்னர்தான் ஆட்டம் ஆரம்பாகி உள்ளது. மதுபோதையில் ஏற்காடு செல்ல பேருந்தில் ஏறியவர்கள், அங்கு ஏற்கனவே விருத்தாசலத்தை சேர்ந்த செல்வம் என்பவர், தண்ணீர் பாட்டிலைப் போட்டு இடம்பிடித்திருந்த சீட்டில் அமர்ந்துள்ளனர்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் செல்வம், தந்தை மற்றும் மகனை தாக்கியதில் இருவருக்கும் தலை மற்றும் வாய்பகுதியில் அடிபட்டு ரத்தம் வழிந்துள்ளது. நிர்மலில் சட்டை, பேண்ட்டும் கைகலப்பில் கிழிந்துள்ளது. பேருந்தில் இருந்து இறங்கிய அப்பாவும் மகனும் அங்கு சேத்தியாத்தோப்பு செல்ல வந்த பேருந்தின் அடியில் படுத்து தங்கள் அதகள ஆட்டத்தை தொடங்கினார்கள். தங்களை தாக்கிய நபர் 5ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டதாகவும் அது வேண்டும் என்றும் கூறி அவர்கள் புலம்பத் தொடங்கினார். போக்குவரத்து போலீசாரும், மற்றவர்களும் அவர்களை நகரும்படிக் கூறியும் மறுத்து வீம்பு பிடித்தனர்.

ஒருவழியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட தந்தையையும் மகனையும், பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு செல்வமும் இருக்க, அப்பாவும் மகனும் ஆவேசமாகினர். தங்கள் பணத்தை தரக்கேட்டும் இந்த வீடியோ வெளியே எல்லா இடமும் பரவ வேண்டும் என்றும் போதையில் அந்த இடத்தையே பரபரப்பாக்க, போலீசார் மதுபோதை நபர்களை அடிக்கவும் முடியாமல், சமாதானப்படுத்தவும் முடியாமல் அல்லாடினர்.

இதன்பிறகு அவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸை வரவழைத்தும் அதில் ஏற மறுத்து அடம்பிடித்ததால், போலீஸ் ரோந்து வாகனத்திலேயே அழைத்து சென்றனர். அப்போதும் இந்த வீடியோவை போடுங்கள் என்று கூறிச் சென்றது நகைப்பை ஏற்படுத்தியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow