நள்ளிரவில் நடந்த என்கவுண்டர்.. வெளியான அதிர்ச்சி தகவல் | Iran Thief | Chain Snatch

சென்னையில் நேற்று காலை 1 மணி நேரத்திற்குள்ளாக 7 இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற நகைபறிப்பு சம்பவம்.

Mar 26, 2025 - 10:10
 0

சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி 3 மணி நேரத்திற்குள்ளாக கொள்ளையர்களை அதிரடியாக கைது செய்தனர்

நகைகளை கொள்ளையடித்து விட்டு விமானம் மூலம் தப்பி செல்ல முற்பட்ட போது விமான நிலையத்திற்குள் புகுந்து கொள்ளையர்களை கைது செய்த காவல்துறை

கைது செய்யப்பட்ட இருவர் அளித்த தகவல் அடிப்படையில் கொள்ளையில் தொடர்புடையதாக 3வது நபரையும் கைது செய்த போலீசார்

3வது நபரை ஆந்திர நெல்லூர் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்

கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் ஹுசைன், நகைகளை பதுக்கி வைத்த இடத்தை காட்டுவதாக கூறி தப்ப முயன்றுள்ளார்

தரமணி ரயில் நிலையம் அருகே தப்ப முயன்ற ஜாபர் ஹுசைன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் காயமடைந்துள்ளார்

காயமடைந்த ஜாபர் ஹுசைனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்துள்ளது

ஜாபர் ஹுசைன் மீது மேலும் 50 கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும், ஈராணிய கொள்ளையர்களில் முக்கியமானவர் எனவும் போலீசார் தரப்பில் தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவரை என்கவுண்டர் செய்த முகமது புகாரியே ஜாபர் ஹுசைனையும் என்கவுண்டர் செய்துள்ளார்

சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றது முதல் இது 4வது என்கவுண்டர் ஆகும்

முன்னதாக திருவேங்கடம், காக்கத்தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்பட்டனர்

 திருவான்மியூர், கிண்டி, பெசண்ட் நகர், சாஸ்திரிநகர், வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow