அமெரிக்க அதிபர் தேர்தலில் திருப்பம் - டிரம்ப் முன்னிலை; கமலா ஹாரிஸ் பின்னடைவு
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் யாரும் எதிர்பாராத வகையில் முன்னிலை வகித்து வருகிறார்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டனர். அதிபர் தேர்தலில் டிரம்பை விட கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியானது.
வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதற்கட்ட முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதில், மொத்தமுள்ள 538 இடங்களில் குடியரசு கட்சியின் சார்பில் களத்தில் உள்ள டொனால்ட் ட்ரம்ப் 137 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறார். ஜனநாயக கட்சி சார்பில் களத்தில் உள்ள கமலா ஹாரிஸ் 99 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறார்.
10 மாகாணங்களில் டொனால்ட் ட்ரம்ப் 53.5% வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார். ஜனநாயக கட்சி சார்பில் களத்தில் உள்ள கமலா ஹாரிஸ் 45.4% வாக்குகளுடனும் பின்னடைவையும் சந்தித்து இருக்கிறார். 270 வாக்குகளை பெறுபவர்கள் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?