தினசரி 200 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்... அமைச்சர் கொடுத்த ரிப்போர்ட்
கடந்தாண்டை விட 7 லட்சம் மெட்ரிக் டன் அளவு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், அதிக நெல் கொள்முதல் உள்ள இடங்களில் மெகா கொள்முதல் நிலையங்கள் அமைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.
200 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தை பொருத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 425 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டில் மொத்தமாக 3,332 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு இதுவரை கடந்தாண்டை விட 7 லட்சம் மெட்ரிக் டன் அளவு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
Read more: Gas cylinder price: வணிக சிலிண்டர் விலை குறைந்தது!
இதுவரை நெல் கொள்முதல் நிலையங்களில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் நாளொன்றுக்கு 20 மெட்ரிக் டன் அளவிலான நெல்லே கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது மெகா கொள்முதல் நிலையங்களை அமைத்து வருகின்றோம். மெகா கொள்முதல் நிலையங்களில் கன்வேயர், தானியங்கி இயந்திரம் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் கொள்முதல் அளவு நாளொன்றுக்கு 200 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.
What's Your Reaction?






