ஓடும் ரயிலில் பெண்ணுக்கு கொடூரம் கேள்விக்குறியாகிறதா பெண்கள் பாதுகாப்பு....? ரயில் எண் - 22616-ல் நடந்தது என்ன?

சாலையில் நடந்து சென்ற பெண்ணை ஆட்டோவில் வைத்து கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், ஓடும் ரயிலில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது நெஞ்சை பதற வைக்கிறது. ஏன் இந்த நிலை? பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா?

Feb 7, 2025 - 21:08
Feb 8, 2025 - 11:55
 0
ஓடும் ரயிலில் பெண்ணுக்கு கொடூரம்  கேள்விக்குறியாகிறதா பெண்கள் பாதுகாப்பு....? ரயில் எண் - 22616-ல் நடந்தது என்ன?
ஓடும் ரயிலில் பெண்ணுக்கு கொடூரம் கேள்விக்குறியாகிறதா பெண்கள் பாதுகாப்பு....? ரயில் எண் - 22616-ல் நடந்தது என்ன?

ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 4 மாத கர்ப்பிணி ஒருவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார். பணியில் இருந்து விடுப்பு வாங்கிக்கொண்டு தனது சொந்த ஊரான சித்தூருக்கு செல்ல திட்டமிட்ட அவர் தேர்ந்தெடுத்தது தான் கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் 22616 என்ற எண் கொண்ட இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ். 

ரயில் ஜோலார்பேட்டை செல்லும் வரை அந்த கர்ப்பிணிக்கு எந்த பிரச்னையும் இல்லை. எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்கள் பெட்டியில் பாதுகாப்பாக அமர்ந்திருந்தார் அந்த பெண்.  ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அந்த கர்ப்பிணியை தவிர பெண்கள் பெட்டியில் இருந்த அனைவரும் இறங்கி விட, சத்தமில்லாமல் ஏறி இருக்கிறான் ஹேம்ராஜ். ரயில் கிளம்பிய சிறிது நேரத்தில், தனியாக இருந்த கர்ப்பிணியிடம் தனது பாலியல் சீண்டலை தொடங்கிய ஹேமராஜைக் கண்டு பயந்துப் போன அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். ஆனால், தனியாக சிக்கிக்கொண்ட அந்த பெண் எழுப்பிய கூச்சல், ரயிலின் வேகத்தில் அடுத்து இருந்த பெட்டியில் இருந்தவர்களின் காதில் கூட விழவில்லை. 

ஒருகட்டத்தில் கொடூரன் ஹேம்ராஜை தனது முழு பலம் கொண்டு தாக்கி இருக்கிறார் அந்த பெண். இதனால் மிரண்டு போன ஹேம்ராஜ், தனியாக சிக்கிய அந்த பெண்ணின் முடியை பிடித்து தரதரவென இழுத்துவந்து ரயிலில் இருந்து கிழே தள்ளியுள்ளான். அப்போது ரயில் கே.வி.குப்பம் அருகே சென்று கொண்டு இருந்தது. படுகாயம் அடைந்து மயக்க நிலையில் தண்டவாளத்தில் இருந்த அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கை, கால் முறிவுடன் அந்த 4 மாத கர்ப்பிணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த ரயில்வே போலீசார், கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த ஹேமராஜ் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் இதேவேலையாக சுற்றிதிரிந்து வருபவர் தான் இந்த ஹேம்ராஜ் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளது காவல்துறை. 

அதாவது வழக்கமாக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் காத்திருந்து காலியாக வரும் ரயிலில் ஏறி செயின் பறிப்பது தான் ஹேம்ராஜின் வேலையாக இருந்துள்ளது. காலியாக இருக்கும் ரயிலின் பெண்கள் பெட்டியில் ஏறும் இவர், கழிவறை அருகே பதுங்கி இருந்து கொண்டு கே.வி குப்பம் அருகே கிராசிங்கில் ரயில் மெதுவாக செல்லும்போது, பெண்களிடம் இருந்து நகைகளை பறித்துக்கொண்டு தப்பிவிடுவானாம். அதேபோல் தான் அன்றும் இன்டர்சிட்டி ரயிலில் ஏறி பதுங்கி இருந்துள்ளான். ஆனால், அன்று அந்த பெண்கள் பெட்டியில் இந்த 4 மாத கர்ப்பிணி மட்டும் தனியாக இருக்க, பாலியல் தொல்லையும் கொடுத்திருக்கிறான் இந்த கொடூரன். 

இந்த நிலையில், காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து ஹேம்ராஜை கைது செய்து காலில் மாவு கட்டு போட வைத்தாலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இதே போன்று ஒரு குற்றத்தை செய்த ஹேம்ராஜ்க்கு சரியான தண்டனை கொடுத்து இருந்தால் தற்போது ஒரு பெண் இந்த கொடூரனால் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow