திருச்செந்தூரில் தொடர் கடல் அரிப்பு... காரணம் என்ன? களத்தில் இறங்கிய ஆராய்ச்சி குழு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் தொடர் கடல் அரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பு தொடர் கடல் அரிப்பு. கடல் அரிப்பு குறித்து தேசிய ஆராய்ச்சி மைய குழுவினர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்புள்ள கடற்கரையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடல் சீற்றத்தின் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டது.
இதனால் சுமார் 50 அடி தூரத்திற்கு கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் கடலில் புனித நீராட முடியாத நிலை ஏற்பட்டது.
நேற்றைய தினம் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ராமநாதன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் திருச்செந்தூர் கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?