ஜோசியராகவே எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
திமுக கூட்டணி உடைந்துவிடும் எனக் கூறி ஜோசியராகவே எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக கூட்டணி உடைந்துவிடும் எனக் கூறி ஜோசியராகவே எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சிக்க தகுதியில்லை என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணி வலுவாக இருப்பதால் விரக்தியின் விளிம்பில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக சாடினார். திமுக கூட்டணியில் வாதங்கள் இருக்கலாம், ஆனால் விமர்சனங்கள் இருக்காது என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்தார்.
What's Your Reaction?






