இன்றைக்கும் நான் ஆளுநர்தான்... மக்களின் அன்பை ஆண்டு கொண்டிருக்கிறேன்.. தமிழிசை சௌந்தரராஜன்!

மக்களிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயற்கையான வரவேற்பை தான் பெற்று வருகிறார். ஆனால் அதிகமான வரவேற்பு உள்ளது போல் முதலமைச்சர் கூறி வருகிறார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

Nov 10, 2024 - 04:07
Nov 10, 2024 - 04:15
 0
இன்றைக்கும் நான் ஆளுநர்தான்... மக்களின் அன்பை ஆண்டு கொண்டிருக்கிறேன்.. தமிழிசை சௌந்தரராஜன்!
இன்றைக்கும் நான் ஆளுநர்தான்... மக்களின் அன்பை ஆண்டு கொண்டிருக்கிறேன்.. தமிழிசை சௌந்தரராஜன்!

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் அறக்கட்டளையின் 35 ஆவது ஆண்டு விழாவில், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் விழாவின் மேடையில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “ஆளுநராக இருந்த போது என்னை அக்கா என்று அன்போடு அழைத்தார்கள். நான் இப்போதும் ஆளுநர் தான். எப்படி என்றால் மக்களின் அன்பை ஆண்டு கொண்டிருப்பதால் நான் எந்நாளும் ஆளுநர் தான். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு நன்றி. அதுவும் தவறில்லாமல் பாடியதற்கு நன்றி. தமிழகத்தில் இப்போதெல்லாம் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுமா என்று சந்தேகம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ்தாய் வாழ்த்து பாடலை தவறு இல்லாமல் பாடுவதே அறிதாக உள்ளது.  

எங்கள் கூட்டணியை பலம் பொருத்திய கூட்டணியாக மாற்றி 2026 திமுக இல்லாத  ஆட்சியாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறோம் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். மருத்துவத்துறையாக இருக்கட்டும் பள்ளிக் கல்வித்துறையாக இருக்கட்டும்  பல வேலைகள் முடிவுராமல் உள்ளது. மக்களிடத்தில் வரவேற்பு அதிகமாக உள்ளது என முதல்வர் கூறி வருகிறார். ஆனால் செயற்கையான வரவேற்பை முதல்வர் பெற்று வருகிறார். திமுக  கூட்டணியில் உள்ளவர்கள் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. காங்கிரஸ் மதச்சார்பற்ற கட்சி என்ற முகத்திரை கிழிந்து இருக்கிறது. அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி உறுதியாக இல்லை. டென்ஷன் இல்லை என்றால் அல்லியை பார்த்து தாமரை என ஏன் கூற வேண்டும்? அண்ணன் சேகர்பாபு தான் பதற்றத்தில் இருக்கிறார் நாங்கள் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

இவரைத்தொடர்ந்து பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், “எம்மதமும் சம்மதம் என்கிற ரீதியில் அனைத்து தரப்பு மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அவர்களுடைய வாழ்வாதாரம் உயரும் வகையில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை வளமுடன் இருக்க சிறப்பான திட்டங்களை மத்திய அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகம் போன்ற ஒரு சில அரசுகள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அரசினுடைய திட்டங்களை தவிர்ப்பது மக்களுடைய எண்ணங்களை அரசு புறக்கணிப்பதாக அர்த்தம். ஏழை எளிய மக்களுடைய வளர்ச்சியை அவர்கள் தடுப்பதாகவே அர்த்தம். எனவே மத்திய அரசினுடைய அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் மற்றும் அதை முறையாக சரியாக செயல்படுத்த வேண்டும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு வளமான தமிழகம் வலிமையான பாரதம் தேவை. மத்திய அரசை பொருத்தவரை மத நல்லிணக்க எடுத்துக்காட்டான அரசாக இருக்கிறது. தமிழகத்திலே எந்தெந்த கட்சியோடு எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இருக்கிறது என்பதை பாருங்கள். எந்த கட்சி கூட்டணிக்கு தலைமை வகிக்கிறதோ அந்த கட்சி  A டீமாக இருக்கிறது. அந்த கட்சியோடு கூட்டணியாக இருக்கிற கட்சிகள் B டீமாக இருக்கிறது. இந்த கூட்டணியில் சேராத கட்சிகள் C டீமாக இருக்கிறது. சில நேரங்களில் சில கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் கூட C டீமாக செயல்பட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டு தேர்தலை பொருத்தவரையில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஓர் அணியில் நின்று ஆட்சி அமைக்கும் என்ற நல்ல நிலை ஏற்படும்' எனத் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow