பாஜக-வில் ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் மாவட்டத் தலைவர்கள் நியமனத்தை தொடர்ந்து மாநிலத் தலைவர் நியமிக்கப்படுவது வழக்கம். இதன் பின்னரே தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். தமிழ்நாட்டை பொறுத்தவரை அண்ணாமலை மூன்று வருடங்கள் கட்சியின் தலைவராக நீடித்துவிட்டார். கடந்த ஜூலை மாதமே அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்துவிட்டது.
அண்ணாமலை மீண்டும் தலைவராக நியமிக்கப்படுவதை சீனியர்கள் சிலர் ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் மேற்படிப்பிற்காக அண்ணாமலை கடந்த 2024 ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்றிருந்தார். அப்போது, அவரது பதவிக்காக கட்சியின் சீனியர்கள் டெல்லியில் லாபி பிடிக்கச் சென்றதாகவும், ஆனால் அண்ணாமலை திரும்பி வந்த பிறகு உட்கட்சித் தேர்தலை நடத்துவதுதான் ஒரே திட்டம் என்று டெல்லி தலைமை ஸ்டிரிக்ட்டாக சொல்லிவிட்டதாகவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து உட்கட்சி தேர்தல் பணிகள் தொடங்கியது.
அண்ணாமலையும் படிப்பை முடித்து திரும்பிவந்துவிட, மாநிலத் தலைவராக அண்ணாமலையே தொடர்ந்து வருகிறார். இதனால், சீனியர்கள் கடும் அப்செட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் உட்கட்சித் தேர்தலோடு, மாநிலத் தலைவர் தேர்வும் நடைபெறும் என்று சொல்லப்பட்டது. இந்த ரேசில் அண்ணாமலை, வானதி, தமிழிசை, நயினார், கரு.நாகராஜன் உள்ளிட்டோர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்றால் அதற்கு அண்ணாமலை தடையாக இருப்பார் என டெல்லி தலைமை யோசித்ததாகவும், அதற்காக அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த நயினார் நாகேந்திரனை கட்சியின் மாநிலத் தலைவராக்கலாம் என்று யோசித்ததாககவும் தகவல் வெளியானது.
ஆனால் இதை எதையுமே பொருட்படுத்தாத அண்ணாமலை, எப்படி திராவிட கட்சிகளை பேசி பேசி வளர்ந்த கட்சிகள் என்று கூறுகிறோமோ, அதே டெக்னிக்கை கொஞ்சம் நவீனத்துவமாக செய்து தமிழ்நாட்டில் தற்போது பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை நோக்கி பாஜகவை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
சீனியர்கள் அதிருப்தி... உட்கட்சி மோதல்..... கட்சி மீதான விமர்சனங்கள் என அனைத்தையும் சர்வசாதரானமாக க்டந்து செல்லும் அண்ணாமலைக்கு, முழுமுதற் டார்கெட்டாக இருப்பது திமுக… திமுக… திமுக மட்டுமே.......
இப்படி தீவிர அரசியலை செய்துவரும் அண்ணாமலையின் மாநில தலைவர் என்ன ஸ்டேடஸ்ஸில் இருக்கிறது என பலரும் யோசித்துக்கொண்டிருக்கும் நிலையில் தான், சென்னை திருவான்மியூரில் நடந்த பாஜகவின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் தலைவர் பதவி குறித்து அண்ணாமலையே சூசகமாக பேசியுள்ளார்.
சீனியர் தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய அண்ணாமலை, “பாஜகவில் தலைவர்கள் மாறிக்கொண்டே தான் இருப்பார்கள் என்றார். நானும் தலைவராக எப்போதும் இருக்க முடியாது என்று கூறிய அண்ணாமலை, ஆனால் தாம் எதுவரை நீடிப்பேன் என்பதை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.....
அதாவது திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவி எடுக்கும் வரை இருப்பேன்... 2026ல் ஊழல் அமைச்சர்கள் சிறைக்கு செல்வதை பார்க்கும் வரை இங்கு தான் இருப்பேன்..” என அண்ணாமலை பேசியுள்ளார்.
இந்நிலையில், 2026ம் ஆண்டு வரை பாஜகவின் மாநில தலைவர் பொறுப்பில் நான் தான் இருப்பேன் என அண்ணாமலை சூசகமாக தெரிவித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அண்ணாமலை கூறியது போல், மீண்டும் அவர் மாநில தலைவராக நியமிக்கப்படுவாரா அல்லது பாஜகவின் மற்ற சீனியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறதா என்பதை பொறுத்திருந்து tஹான் பார்க்க வேண்டும்...