விஜய் சாதாரண ஆள் கிடையாது.. குறைத்து எடை போடாதீங்க.. அவருக்கு பின்னால்.. புகழேந்தி அதிரடி
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது. அரசியலில் உள்ளே வரும் அவருக்கு இளைஞர் பட்டாளம் ஆதரவாக உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “அதிமுக நாளுக்கு நாள் மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது ஏதாவது ஒற்றுமை ஏற்பட்டு எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் பரிணாமத்தில் பல வெற்றிகளை கண்ட இந்த இயக்கம் மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் 7 இடங்களில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. 13 இடங்களில் அண்ணாமலை அதிமுகவை கிண்டல் செய்வதுபோல நிலைமை ஆகிவிட்டது. ஆனால், எடப்பாடி அணியினர் வாக்கு சதவீதத்தை கூறிவருகின்றனர். 2019-ல் 20 இடத்தில் நின்று வாங்கிய வாக்குகள் தான், தற்போது 2024 தேர்தலில் 34 இடத்தில் போட்டியிட்டு அதே வாக்குகள் தான் வாங்கி உள்ளனர்? இவ்வளவு சதவீதம் வாக்கு வாங்கி இருக்கிறோம் என்றால் உங்களை நாடாளுமன்றத்தில் உள்ளே விடுவார்களா?
சசிகலா முதலில் நீங்கள் இறங்கி வந்து, ஓபி.எஸ்., இ.பி.எஸ்., இருவரையும் அழைத்து பேச வேண்டும். ஓபிஎஸ் அவர்கள் நான் எல்லாத்தையும் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறேன் என கூறுகிறார். முதலில் போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் வீட்டிற்குச் சென்று பேசுங்கள். அதன் பிறகு இ.பி.எஸ்.,-ஐ அழைத்துப் பேசுங்கள்.
மது ஒழிப்பிற்கு எதிராக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அற்புதமான ஒன்றை கையில் எடுத்திருக்கிறார். கட்சிக்கு அப்பாற்பட்டு பொதுநல உணர்வோடு மது ஒழிப்பு மாநாடு கையில் எடுத்திருக்கிறார். மது ஒழிப்பதற்கு திருமாவளவன் எடுத்திருக்கிற முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். தந்தை பெரியார் அவர்கள் மது ஒழிப்பிற்காக, தனது சொத்தை ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை அளித்தார். கல் விற்பனை ஒழிய வேண்டும் என போராட்டங்கள் நடத்தியவர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார். புது நிகழ்வுகள் புது வரவுகள் வந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் இணைந்து பேசும்பொழுது எடப்பாடி பழனிச்சாமி தான் தலைமை ஏற்க வேண்டும் என கூறினால் ஏற்றுக் கொள்கிறோம் அல்லது அதே கூட்டத்தில் வேறு ஒருவர் தலைமை ஏற்க வேண்டும் என கூறினாலும் அதை ஏற்கிறோம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இறங்கி வர மறுக்கிறார்.
எம்ஜிஆர் திண்டுக்கல்லில் 1973-ல் சித்தனை தோற்கடித்து மாய தேவர் வென்றார். அதன் பிறகு 77இல் ஆட்சி அமைத்தார். ஆனால் விஜய் இன்றைக்கு உள்ளே வருகிறார். அவர் பின்னால் இளைஞர்கள் பட்டாளம் அதிகம் உள்ளது. செஞ்சி ராமச்சந்திரன் சென்றாலும் பரவாயில்லை, அவர் போவதும் இருப்பதும் அவருடைய விருப்பம் என்றார்.
2026-க்குள் நான்கு அணிகளாக உள்ள அதிமுக ஒன்று இணைந்தால் 2026ல் திமுகவிற்கு ஒரு சவாலாக அமையும். அதிமுக தான் வெல்லும் அதில் எந்த மாற்றமும் இல்லை. 2026-ல் விஜய் எந்தளவுக்கு மாற்றத்தை கொடுப்பார்? அவர் விஜயகாந்த் அளவிற்கு வருவாரா..? அல்லது அதைவிட உயரமாக வருவாரா.? என்பது மக்கள் தீர்ப்பு. அவரைக் குறைத்து எடை போட விரும்பவில்லை” என அவர் தெரிவித்தார்.
What's Your Reaction?






