போகி பண்டிகை.. புகை மண்டலமான சென்னை..!

சென்னையில் போகி பண்டிகையை கொண்ட பழையன கழிதல் என்ற முறையில் மக்கள் பழைய பொருட்களை தீயிட்டு எரித்ததால் சென்னையில் மாசு அதிகரித்து புகை மண்டகமாக காட்சி அளிக்கிறது.

Jan 13, 2025 - 08:09
 0
போகி பண்டிகை.. புகை மண்டலமான சென்னை..!
போகி பண்டிகை.. புகை மண்டலமான சென்னை..!

தமிழர் திருநாள் தைத்திருநாள் என்று கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படும் நிலையில், பொங்கல் பண்டிகையின் முதல் நாள் மார்கழி மாதத்தில் கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீமையை எரிக்கும் போகி பண்டிகையில், தீமை விலகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. பொதுவாக போகி என்றால் தேவையில்லாததை கலைந்து தேவையானதை கையில் கொள்வது பழையன கழிந்து புதியன புகுதல் பண்டிகை நாளை போகி தீமை விலகும் போகி பண்டிகை பாரம்பரியமாக பழைய என கழித்தல் புதியன புகுதல் என்ற  போகி பண்டிகையானது வீட்டில் இருக்கும் உபயோகிக்கும் இல்லாத பொருட்கள் மற்றும் பழைய பொருட்கள் எரித்து தீமூட்டி மேளம் கொட்டி அதை சுற்றி நின்று ஆடி பாடி கொண்டாடுப்படுவது முன்னோர்கள் வழக்கம் இதன் மூலமாக நாம் சுற்றி இருக்கும் அனைத்து தீமைகளும் விளக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

பொங்கல் தினத்திற்கு முதல் நாளான இன்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்றார்போல பழையவற்றை எரித்து போகிப் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீட்டில் உள்ள பயன்படாத பழைய பொருட்களை மக்கள் எரித்து வருவதால் சென்னையின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பனியுடன் புகையும் கலந்து மூட்டமாக உள்ளது. 

சென்னையில் அதிகாலை முதலே போகிப் பண்டிகை வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பழைய பொருட்களை எரித்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த நிலையில், பொதுமக்கள் வேண்டுகோளை புறக்கணித்து போகியில் பழைய பொருட்களை எரித்து வருகின்றனர். பாரம்பரிய கலாச்சாரத்தை பின்பற்றி போகி பண்டிகையை கொண்டாடும் பொதுமக்களால், சென்னையில் அதிகாலையிலேயே வீதி எங்கும் ஒரே புகைமூட்டமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

புகை மட்டுமில்லாது, மேளம், பாட்டு என அதிக சத்தத்தாலும், புகையினால் மூச்சுவிட முடியாமலும் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் உட்பட அனைவரும் கடுமையாக பாதிப்பட்டனர். மேலும், சென்னையில் காற்றின் தரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow