நாமக்கல் அரசு மருத்துவமனையில் மாணவர் உயிரிழப்பு.. போலீஸ் விசாரணை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறையில் தனியார் பயிற்சி கல்லூரி மாணவர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

Jan 6, 2025 - 19:30
 0
நாமக்கல் அரசு  மருத்துவமனையில் மாணவர் உயிரிழப்பு.. போலீஸ் விசாரணை

நாமக்கல்லில்  போதைக்காக அளவுக்கு அதிகமான வலிநிவாரண மருந்தை  பயன்படுத்திய தனியார் கல்லூரி மாணவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கழிவறையில் உயிரிழந்து கிடந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் மாணவர் சந்தானகோபாலன். இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பார்மஸி கல்லூரியில் நான்காம் ஆண்டு பார்மஸி படித்து வருகிறார். இவரை கல்லூரி சார்பில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பணியில் அமர்த்தப்பட்டார். 

இந்த சூழலில், இன்று  வழக்கம் போல் மருத்துவமனைக்கு வந்த அவர் மூன்றாம் தளத்தில் உள்ள பெண்கள் வார்டில் பணியாற்றி வந்தார். அப்போது அங்குள்ள சக நண்பர் ஒருவரிடம் கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு மருத்துவர்கள் பயன்படுத்தும் கழிவறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் கழிவறையை விட்டு வெளியே வராததால் சக நண்பர்கள் கழிவறையின் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது வாயில் நுரை தள்ளியவாரு  கிடந்துள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் மாணவர் சந்தான கோபாலன் உடலை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நல்லிபாளையம் போலீசார், மாணவர் பயன்படுத்திய கழிவறையை ஆய்வு செய்த போது அதில் இரண்டு வகையான வலி நிவாரண மருந்து குப்பிகளும் ஊசியும் கிடந்துள்ளது. இதனையடுத்து, மாணவர் சந்தான கோபாலன் அளவுக்கதிகமாக வலி நிவாரண மருந்தினை பயன்படுத்தியதால் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சக நண்பர்களிடம் விசாரணை செய்ததில் சந்தான கோபலனுக்கு ஏற்கனவே போதைக்காக வலி நிவாரண மருந்துகளை ஊசி மூலம் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. 

இந்த சூழலில், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருந்து கிடங்கில் இருந்து மாணவர் அந்த வலி நிவாரண மருந்துகளை திருடி சென்று பயன்படுத்தினாரா என்பதும் குறித்தும் மருந்து கிடங்கில் உள்ள மருந்துகள் இருப்பு குறித்தும் மருத்துவக்கல்லூரி டீன் சாந்த அருள்மொழி ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார். 

போதைக்காக அளவுக்கு அதிகமாக வலிநிவாரண மருந்தை பயன்படுத்தியதால் மாணவர் உயிரிழந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow