Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சதுர்த்தியன்று பட்டாசு வெடிக்கத் தடை... சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு

Firecrackers Ban in Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபாடு செய்வதற்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது.

Aug 29, 2024 - 11:19
Aug 29, 2024 - 13:18
 0
Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சதுர்த்தியன்று பட்டாசு வெடிக்கத் தடை... சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு
விநாயகர் சதுர்த்தியன்று பட்டாசு வெடிக்கத் தடை

Firecrackers Ban in Vinayagar Chaturthi 2024 : விநாயகர் அவதரித்த தினத்தை தான் நாம் விநாயகர் சதுர்த்தி தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறோம். விநாயகரை நாம் மொத்தம் 51 வடிவ சிலைகளாக வழிபட்டு வருகிறோம். அதன்படி அடுத்த மாதம் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. 

இந்நிலையில் விநாயகர் சதுர்த்து அன்று சென்னையில் சிலைகளை வைத்து வழிபடும் பல்வேறு அமைப்பினருடன் மாநகர காவல்துறை சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வதற்கான அறிவுரைகள், வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன. அதில், 

• விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

• தீயணைப்புத்துறை, மின்வாரியம், ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.

• சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதியளித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

•நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்திலிருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.

• பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.

• மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது.

• சிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.

•நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் எவ்வித அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான பலகைகள்/ விளம்பரத்தட்டிகள் வைக்கக்கூடாது.

•தீ பாதுகாப்பு விதிமுறைகளும், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும், மின்சார சாதனங்கள், பந்தல்கள் அவ்வப்போது கண்காணித்து, விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

• விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும். 

•விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை

உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow