மகா கும்பமேளா 2025: காலால் நோயை குணப்படுத்தும் பாபா.. நடந்தது என்ன?

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்து கொண்ட பாபா அர்தத்ரானா என்பவர் தனது காலின் தொடுதல் மூலம் நோயை குணப்படுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Jan 25, 2025 - 13:29
 0
மகா கும்பமேளா 2025: காலால் நோயை குணப்படுத்தும் பாபா.. நடந்தது என்ன?
காலின் தொடுதல் மூலம் நோயை குணப்படுத்தும் பாபா அர்தத்ரானா

உலகின் மிக பெரிய ஆன்மிகம் மற்றும் கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும். இந்த கும்பமேளா ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை சுமார் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர்.

இந்நிலையில்,  கும்பமேளாவில் கலந்து கொண்ட பாபா அர்தத்ரானா (Artatrana) என்பவர் தனது காலின் தொடுதல் மூலம் நோய்களை குணப்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும், இவர் தனது தொடுதல் மூலம் மிக கொடிய நோயான புற்று நோய் போன்றவற்றையும் குணப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இவரை காண்பதற்காக மக்கள் பலர் வரிசையில் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து பாபா அர்தத்ரானா ஏஎன்ஐ (ANI) செய்தியாளர்களிடம் கூறியதாவது, 2007-ஆம் ஆண்டிலிருந்து இந்த தெய்வீக சிகிச்சையை செய்து வருகிறேன். எவ்வளவு கொடிய நோயையும் என் காலின் தொடுதல் மூலம் சரிசெய்து விடுவேன். வெளிநாடுகளில் இருப்பவர்கள் என்னுடன் தொலைபேசியில் உரையாடி என் மந்திரங்களை கேட்பதன் மூலம் சரியாகிவிடுவார்கள்.  கொரோனா காலத்தின் போது பலபேரை காலின் தொடுதல் மூலம் குணப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, ஓடிசா, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள மக்களையும் குணப்படுத்தி வருகிறேன். இது சிவபெருமானின் ஆசிர்வாதம். அவர் ஆசியினால் மிகக்கொடிய நோயையும் ஒரு தொடுதலில் என்னால் குணப்படுத்த முடியும். கடவுள் ஏன் எனக்கு இவ்வளவு சக்தியை கொடுத்தார் என்று தெரியவில்லை. என்று கூறினார். 

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தொடுதலில் ஒருவர் எப்படி புற்றுநோய் போன்றவற்றை குணப்படுத்துவார். இது எப்படி சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், பொதுவாக இந்தியாவில் சாமியார்கள் தொடர்ந்து தான் கிருஷ்ணரின் அவதாரம், மகா காளியின் சக்தி என்று பக்தர்களை ஏமாற்றி வருகின்றனர். அதேபோன்று இதுவும் ஒரு ஏமாற்று வேலை தான் என கருத்து தெரிவித்து உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow