ஒரு பாடலுக்கு இத்தனை கோடியா..! பிரபல இசையமைப்பாளரின் சம்பளம் இதுதான்
ஒரு பாடல் பாட ஏ.ஆர்.ரகுமான் மூன்று கோடி ரூபாய் வரை ஊதியமாக பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இன்று வரை பின்னணி பாடகர்களுக்கு இடையே ஊதிய பாகுபாடு பெரும் பிரச்சனையாக உள்ளது. ஆனால், முந்தைய காலத்தில் பாடகர்கள் தங்களை இசைக்காக அர்ப்பணித்தனர். பிரபல பாடகர்கள் சிலர் ஊதியம் பெறாமலேயே பாடல்கள் பாடிய நாட்களும் உள்ளன.
கடந்த காலத்தை ஒப்பிடும் போது இந்த காலத்தில் பாடகர்களுக்கு அவர்களின் திறமைகளுக்கு ஏற்ப ஊதியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அர்ஜித் சிங், ஸ்ரேயா கோஷல், சோனு நிகம் போன்ற பாடகர்கள் அதிகம் ஊதியம் வாங்கும் தரவரிசையில் இடம்பிடித்துள்ளனர். இவர்களை மிஞ்சும் வகையில் இசைப்புயல் ஏர்.ஆர்.ரகுமான் ஒரு பாடலுக்கு மூன்று கோடி ரூபாய் வரை ஊதியமாக பெறுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், இசையமைப்பது மற்றும் பாடல் பாடுவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். பெரும்பாலும் தான் இசையமைக்கும் படங்களில் ஒரு சில பாடல்களை அவரே பாடியும் வருகிறார். இவ்வாறு ஒரு பாடல் பாடுவதற்கு ஏ.ஆர்.ரகுமான் மூன்று கோடி ரூபாய் வசூலிப்பதாக கூறப்படுகிறது.
முழுகவனத்தையும் இசையமைப்பில் செலுத்த வேண்டும் என நினைக்கும் ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர்கள் தன்னை ஒரிஜினல் ஸ்கோர் பிரிவுகளில் ஈடுபடுத்துவதை தவிர்ப்பதற்காக இவ்வாறு ஊதியம் கேட்பதாக கூறப்படுகிறது.
மேலும், ஏ.ஆர்.ரகுமான் நேரலை நிகழ்ச்சிகளுக்கு ஒரு கோடி முதல் இரண்டு கோடி ரூபாய் வரை வசூலிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு இசை, பாடல் என பல்வேறு பிரிவுகள் ஏ.ஆர்.ரகுமான் பிசியாக வலம் வருகிறார்.
சிறுவயதிலேயே தந்தை இழந்த ஏ.ஆர்.ரகுமான் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகே இந்த நிலையை அடைந்துள்ளார். சிறுவயதில் தனக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட்டதாகவும் மேடை நிகழ்ச்சியின் போது அவர் விவரித்துள்ளார். இவ்வாறாக பல்வேறு பிரச்சனைகளை கடந்து ஏ.ஆர்.ரகுமான் இந்த உயரிய நிலையை அடைந்துள்ளார்.
இப்படி உலகம் போற்றும் இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளத்தில் விவாதப்பொருளாக தற்போது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?