துரைமுருகன் மீது இன்றும் அந்த குற்றச்சாட்டு உள்ளது- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்
பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்திட்டு பள்ளி கல்வித்துறைத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஒப்புதலே கொடுக்கவில்லை என பச்சை பொய் பேசுகிறார்கள் என சாடினார்.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் குற்றச்சம்பவங்களை மடைமாற்றி திசை திருப்புவதற்காகவே மும்மொழிக் கொள்கையை திமுக அரசு கையில் எடுத்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் ஏன் பங்கேற்கவில்லை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கொசப்பேட்டை பகுதியை சுற்றியுள்ள ஏழை மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அன்னதானம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி 24ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அதிமுக சார்பில் செய்து வருகிறோம். வருடம் முழுக்க கொண்டாடக்கூடிய மாபெரும் தலைவி ஜெயலலிதா.மக்கள் இருக்கும் இடத்திற்கு ஓடோடி சென்று மக்கள் நலத்திட்டங்களை ஓடோடி செய்பவர் ஜெயலலிதா தான். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திருமண விழாவில் எடப்பாடி பழனிச்சாமியும், செங்கோட்டையனும் சந்தித்துக்கொள்ளாதது குறித்து விளக்கினார். எஸ்.பி, வேலுமணியின் திருமண நிகழ்ச்சி ஒரு குடும்ப நிகழ்ச்சி.அதில் நானும் கூட கலந்து கொண்டேன்.
விமானம் தாமதமானதால் நானும் கூட தான் பொதுச்செயலாளரை சந்திக்க முடியாமல் போனது, ஆனால் அதற்கு கண்ணு, காது என உள்நோக்கம் வைத்து உருவகப்படுத்தி பேசுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அவமரியாதை செய்யக்கூடாது.
திமுகவின் ஒட்டுமொத்த செயல்பாடுகளே நாகரிகமற்ற செயல்பாடுகள் தான். எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போது சட்டமன்றத்தில் பல அவமரியாதை செய்தார்கள். நாகரீகத்தை கடைபிடிக்காமல் அநாகரிகத்திற்கு அடைக்கலம் கொடுப்பது என்றால் அது திமுக தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வெளியேற்றிய மார்ச் 25ஆம் தேதி எங்களைப் பொறுத்தவரையில் துக்க நாள். பெண் என்றும் பார்க்காமல் ஜெயலலிதாவின் புடவையை இழுத்து, முடியை கலைத்து அராஜகத்தை திமுகவினர் கட்டமைத்தார்கள். இன்றும் துரைமுருகன் மீது ஜெயலலிதாவின் சேலையை இழுத்துப் பிடித்த குற்றச்சாட்டு உள்ளது.
திமுகவினர் நாகரீகம் அற்றவர்கள்
அத்தனையும் மீறி வெளியே வந்து மீண்டும் இந்த சட்டமன்றத்திற்கு முதல்வராக தான் வருவேன் என சவால் விட்டு சென்றார். கூறியது போலவே சவாலை நிறைவேற்றி காட்டினார். திமுகவினர் முந்தைய காலங்களில் வானர படைப்போல எல்லாம் செயல்பட்டு உள்ளார்கள். திமுகவினரை நாகரீகம் அற்றவர்கள் என மத்திய அமைச்சர் நல்ல சான்றிதழ் தான் கொடுத்துள்ளார்.
இருந்தாலும் மாநில அரசின் நலன் கருதி அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டியதற்காகவே நாங்கள் சென்றோம். நாங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு செல்லாமல் இருந்திருந்தால் மாநில அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் அதிமுக உள்ளது என ஆளுங்கட்சி கூறி இருக்கும். அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஜெயலலிதாவை வீரமணி பாராட்டியதை சுட்டிக்காட்டி பேசினேன். ஆனால் அதையெல்லாம் வெளியில் காட்டவில்லை.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களை திமுக அரசும், பொம்மை முதல்வரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். மார்ச் 22 ஆம் தேதி மாநில கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு கொடுத்து வருகிறார். திமுக கட்சி இந்தியா கூட்டணியில் தானே உள்ளார்கள். திமுக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலேயே மும்மொழிக் கொள்கை அமலில் உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை சந்தித்து மும்மொழி கொள்கையை அவர்கள் மாநிலத்தில் செயல்படுத்தாமல் இருக்க ஏன் திமுக தடுத்து நிறுத்தவில்லை. மும்மொழி கொள்கையில் தமிழக காங்கிரசுக்கு ஒரு கொள்கை, தேசிய காங்கிரஸுக்கு ஒரு கொள்கையா. மக்களை மடைமாற்றி திசை திருப்புவதற்கு தான் மும்மொழிக் கொள்கையை திமுக அரசு கையில் எடுத்துள்ளது.
வெளிப்படை தன்மையோடு வெளிப்படுத்த வேண்டும்
கச்சதீவை தாரை வார்த்து மாநில உரிமையை திமுக அரசு விட்டுக் கொடுத்தது, பலமுறை மத்திய அமைச்சர் ஜெயசங்கரை சந்தித்து மீனவர்களுக்கு என்ன நடந்துள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்திட்டு பள்ளி கல்வித்துறைத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஒப்புதலே கொடுக்கவில்லை என பச்சை பொய் பேசுகிறார்கள். சிறப்பான கல்வியை பெற வேண்டும் என்றால் பிஎம்ஸ்ரீ திட்டம் வேண்டுமென கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு அதிகாரிகளே மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்கள் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை சசிகலா, டிடிவி தினகரன் ,திவாகரன் சந்திப்பு குறித்த கேள்விக்கு பொதுச்செயலாளரின் கருத்தே எனது கருத்து என கூறிவிட்டு சென்றார்.
What's Your Reaction?






