"விஜய்-ன் முடிவு மக்களை ஏமாற்றும் விதத்தில் உள்ளது".. "சீமானின் மறு உருவமாக, விஜய் விளங்குவார்"..அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற விஜயின் கோட்பாடுக்கு விசிக-வினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுக, காங்சிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

Oct 28, 2024 - 12:51
 0

விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற தங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதை உணர்ந்து தனது முதல் மாநாட்டு உரையில் பேசியிருக்கும் விஜய்க்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

அதேபோல், இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற விஜய்யின் கோட்பாட்டை வரவேற்பதாகவும், சாதி, மத பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக விஜய் அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சின்ன வயதில் எல்லோரும் பாம்பை பிடித்து தான் வளர்ந்து இருக்கிறோம் எனவும், அரசியலில் விஜய் எந்த திசையில் செல்ல போகிறார் என்பதை பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.

இதையடுத்து, பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் அரசியலுக்காகவும், ஓட்டு வங்கிக்காகவும் சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாத வகையில், நாதக தலைவர் சீமானின் மறு உருவமாக, விஜய் விளங்குவார் என்பது மட்டும் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow