TVK Maanadu: “அலைகடலென திரண்டு வாரீர்..” தவெக மாநாட்டுக்கு ரெடியான தலைவர் விஜய்... வைரலாகும் ப்ரோமோ!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ப்ரோமோஷன் வேலைகளை கட்சியினர் தொடங்கியுள்ளனர்.

Oct 11, 2024 - 23:34
 0
TVK Maanadu: “அலைகடலென திரண்டு வாரீர்..” தவெக மாநாட்டுக்கு ரெடியான தலைவர் விஜய்... வைரலாகும் ப்ரோமோ!
வைரலாகும் தவெக மாநாடு ப்ரோமோ

சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான தளபதி விஜய், அடுத்து அரசியலில் தடம் பதிக்கவுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, அடுத்தடுத்து அறிக்கைகள் வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார். இன்னொரு பக்கம் தவெக கட்சி கொடியை அறிமுகம் செய்த விஜய், தற்போது முதல் மாநில மாநாடு நடத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். கோட் படம் வெளியான பின்னர், கடந்த செப்டம்பர் மாதமே தவெக மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.   

செப்டம்பர் 23ம் தேதி தவெக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தவெக முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக 100 ஏக்கருக்கும் அதிகமான இடங்களை வாடகை அடிப்படையில் ஏற்பாடு செய்துள்ள தவெக, அங்கு மேடை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல், விழுப்புரம் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் தவெக மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.

இதனிடையே மாநாட்டில் பங்குபெறும் கட்சித் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும், தவெக தலைவரும் நடிகருமான விஜய் சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் மாநாட்டின் போது தொண்டர்கள் கடைபிடிக்க வேண்டியது என்ன?, தவெக மீதான விமர்சனங்களுக்கு நாம் எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் மது அருந்திக்கொண்டு மாநாட்டுக்கு வரக்கூடாது, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆர்டர் போட்டிருந்தார். 

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, கொடியில் இருக்கும் சிவப்பு, மஞ்சள் நிறம், உள்ளே இருக்கும் வாகை மலர் ஆகியவை குறித்தும் விஜய் விளக்கம் கொடுக்கவுள்ளார். இதனால் தவெக மாநாடு மீது அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், தவெக மாநாட்டுக்கான ப்ரோமோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக எந்தவொரு அரசியல் கட்சியின் மாநாடு என்றாலும், தொலைக்காட்சி, ரேடியோ ஆகியவற்றில் விளம்பரம் கொடுப்பது வழக்கம். அதேபோல் தவெக மாநாட்டுக்கும் அக்கட்சியினர் விளம்பரங்கள் கொடுத்து வருகின்றனர்.

“அலைகடலென திரண்டு வாரீர்.. புதிய தமிழகம் படைப்போம்” என ரைமிங்கான எதுகை மோனை வாசகங்களுடன் இந்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன. கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனாலும், அவரது அரசியல் கட்சியின் மாநாட்டுக்கு விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ள தவெக மாநாட்டுக்கு, வருணபகவான் வழி கொடுப்பாரா என்பதே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow