perusu movie review: பெருசு திரைப்படம் காமெடியா இருக்கா? இல்லையா?

இன்று வைபவ் மற்றும் சுனில் ரெட்டி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள “பெருசு” திரைப்படம் திரையில் வெளியாகியுள்ளது. இதற்கு பார்வையாளர்களில் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது.

Mar 14, 2025 - 15:13
Mar 14, 2025 - 15:37
 0
perusu movie review: பெருசு திரைப்படம் காமெடியா இருக்கா? இல்லையா?
perusu movie review

இளங்கோ ராம் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பெருசு”. இப்படமானது சென்சார் போர்டில் A சான்றிதழ் பெற்றதை படக்குழு அறிவித்த விதம் சமூக வலைத்தளங்களில் கவனத்தை பெற்றது. வைபவ் மற்றும் சுனில் இருவரும் படத்தின் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கதையின் ஒன்லைன் என்னவென்றால், தங்கள் தந்தையின் மரணத்தை தொடர்ந்து இறுதிச் சடங்கை நடத்த முயல்கின்றனர் அவரது மகன்கள். ஆனால், எதிர்ப்பாராத விசித்திரமான ஒரு சிக்கல் எழுகிறது. அதை அவர்கள் கையாண்ட விதத்தினை முழு காமெடியாக உருவாக்கியுள்ளார்கள் படக்குழு.

திரையில் இன்று வெளியாகியுள்ள நிலையில், இதற்கு என்ன மாதிரியான விமர்சனம் X வலைத்தளத்தில் கிடைத்துள்ளது என்பதனை பார்க்கலாம். ஒரு பயனர், தன்னுடைய பதிவில் 1, 2 சீன்கள் மட்டும் தான் எனக்கு வொர்க் ஆனது. ஒருவேளை திரையரங்கு நிரம்பிய கூட்டத்துடன் இணைந்து பார்த்தால் பிடிக்குமோ? என்னமோ? என பதிவிட்டுள்ளார்.

இன்னொரு பயனர் படத்தை பார்த்து நொந்து போயுள்ளார் போல. காமெடி பண்றேனு கடுப்பேத்துறாங்க. இந்த படத்தினை டிவியில் பார்த்திருந்தால், முதல் அரைமணி நேரத்திலயே சேனலை மாத்திருப்பேன் என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பயனர், 100 சதவீதம் எனக்கு பிடித்துள்ளது. சரியான ஒன்லைன், திரைக்கதையும் நல்ல காமெடித் தளம் என படத்தை புகழ்ந்து எழுதியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow