“சின்ன தளபதி சிவகார்த்திகேயன் வாழ்க... யாரும்மா நீ...” ரசிகையால் பதறிய SK... வைரலாகும் வீடியோ!

இன்று வெளியான அமரன் படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார் சிவகார்த்திகேயன். அப்போது ரசிகை ஒருவர் ‘சின்ன தளபதி’ என கத்துவதைப் பார்த்து, சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.

Oct 31, 2024 - 19:54
Oct 31, 2024 - 22:37
 0
“சின்ன தளபதி சிவகார்த்திகேயன் வாழ்க... யாரும்மா நீ...” ரசிகையால் பதறிய SK... வைரலாகும் வீடியோ!
சின்ன தளபதி சிவகார்த்திகேயன் வாழ்க.

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக இன்று திரையரங்குகளில் ரிலீஸானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தை, கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் மூவியாக உருவாகியுள்ள அமரன், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் குறித்து தனது டிவிட் செய்துள்ள சிவகார்த்திகேயன், “பெருங்காதலும் ஒப்பில்லா வீரமும் தியாகமும் நிறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை பயணத்தை திரையில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.   

முன்னதாக இந்தப் படத்தை முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் நேற்றிரவு படக்குழுவினருடன் பார்த்து ரசித்தனர். அவர்களுக்காக ஸ்பெஷலாக திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று வெளியான அமரன் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்காக சத்யம் திரையரங்கிற்குச் சென்றார் சிவகார்த்திகேயன். அப்போது ரசிகர்கள் அவருடன் செஃல்பி எடுத்து மகிழ்ந்தனர். அமரன் படம் முடிந்ததும் தியேட்டரை விட்டு வெளியே வந்த சிவகார்த்திகேயன், செய்தியாளர்களை சந்தித்தார். 

அமரன் படம் பற்றியும், நேற்றிரவு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனியாக ஸ்க்ரீன் செய்யப்பட்டது குறித்தும் பேசத் தொடங்கினார். அமரன் படம் பார்த்துவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ரொம்பவே நெகிழ்ச்சியானதாகவும், மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்துக்கு நியாயம் சேர்த்திருப்போம் என நம்புவதாகவும் கூறினார். அப்போது ரசிகை ஒருவர் சிவகார்த்திகேயனை பார்த்து ‘சின்ன தளபதி சிவகார்த்திகேயன்’ என தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தார். இதனால் பதற்றமான சிவகார்த்திகேயன், ரசிகையிடம் “அதெல்லாம் வேண்டாம் மா” என்பதாக ரியாக்ஷன் கொடுக்க, அதன்பின்னரே அவர் அமைதியானார்.  

முன்னதாக இருதினங்களுக்கு முன்னர் கோவையில் நடைபெற்ற அமரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், இனிமேல் விஜய் இடத்தில் நீங்கள் தான் என சிவகார்த்திகேயனை பார்த்து ரசிகர்கள் குரல் எழுப்பினர். அப்போதும் சிவகார்த்திகேயன் பதறிப்போய் “அப்படியெல்லாம் சொல்ல வேண்டாம்” என அன்புக் கட்டளையிட்டார். விஜய்யின் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ கேரக்டரில் நடித்தது முதலே, அவரை ரசிகர்கள் சின்ன தளபதி, அடுத்த தளபதி என கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. கோட் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு துப்பாக்கியை கொடுக்கும் விஜய், இனி நீங்கள் தான் மக்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பார். விஜய் அரசியலில் பயணிக்கவுள்ளதால், சினிமாவில் அவரது இடத்திற்கு சிவகார்த்திகேயன் தான், அதனை குறிக்கும் விதமாக தான் அந்தக் காட்சி என ரசிகர்கள் கூறி வந்தனர். கோட் படத்தில் ஆரம்பித்த இந்த துப்பாக்கி பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு வரவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow