Kanguva: கங்குவா இசை வெளியீட்டு விழா தேதி... சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..?

சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம், நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Oct 5, 2024 - 19:04
 0
Kanguva: கங்குவா இசை வெளியீட்டு விழா தேதி... சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..?
கங்குவா இசை வெளியீட்டு விழா அப்டேட்

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம், நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக இத்திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் ரிலீஸாகும் என அறிவிப்பு வெளியானதால், கங்குவா ரிலீஸை ஒத்தி வைத்தார் சூர்யா. அதன்பின்னர் தான் கங்குவா ரிலீஸ் தேதி நவம்பர் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில், கங்குவா படத்தின் ப்ரோமோஷனை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் சூழலில், அதனிடையே கங்குவா ப்ரோமோஷனிலும் சூர்யா கவனம் செலுத்தவுள்ளாராம். கங்குவா படத்தின் பட்ஜெட் ரொம்பவே அதிகம் என்பதால், பாக்ஸ் ஆபிஸ் வசூல் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் தான் வேட்டையனுக்குப் போட்டியாக வெளியாகாமல் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தார் சூர்யா.

கங்குவா படத்தின் முதல் ப்ரோமோஷனாக இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, கங்குவா ஆடியோ லான்ச் வரும் 20ம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரம்மாண்டமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாம். சூர்யா, இயக்குநர் சிவா, பாபி தியோல், திஷா பதானி ஆகியோரும் கங்குவா இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கங்குவா இசை வெளியீட்டு விழாவில், சூர்யாவின் அடுத்தப் படம் குறித்து ஏதும் எக்ஸ்க்ளூசிவ் அப்டேட் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது, ஆனால், அது என்ன அப்டேட் என்பது இதுவரை தெரியவில்லை. இதனிடையே இன்னும் சில தினங்களில், அதாவது இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பே கங்குவா படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ள கங்குவா, சூர்யாவுக்கு தரமான கம்பேக் மூவியாக அமையுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சூர்யா ஹீரோவாக நடித்து கடைசியாக திரையரங்குகளில் ரிலீஸானது எதற்கும் துணிந்தவன் திரைப்படம். இந்தப் படம் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை, அதேநேரம் கமல் – லோகேஷ் கூட்டணியில் வெளியான விக்ரம் படத்தில், ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கேமியோவாக நடித்திருந்தார் சூர்யா. அது ரசிகர்களிடம் மிகப் பெரியளவில் ரீச் ஆனது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow