திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு..!
திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு இன்று (ஜன.18) சென்னை அமைந்தகரையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டை திமுகவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
காலை 10 மணிக்கு ஒரு நாடு ஒரு தேர்தல் கலந்துரையாடல் நடைபெறுகிறது. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் எம்.பி., முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் எஸ்.ஒய்.குரேஷி, இந்து என்.ராம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். இதேபோன்று திமுகவின் முக்கிய தலைவர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்ற உள்ளனர்.
மாநாட்டின் இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உருப்பினர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, துணை பொதுச் செயலாளர்கள் அந்தியூர் செல்வராஜ், கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து திமுகவின் சட்டத்துறையைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
மாநாட்டின் முடிவில் சட்டத் துறை இணை செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறுகிறார். முன்னதாக அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் படங்களை இரா.விடுதலை, என்.ஆர்.இளங்கோ, கே.எம். தண்டபாணி, பி.ஆர். அருள்மொழி, என்.மணிராஜ் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.
மாநாட்டில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், நம் மாநாடு நடத்தினால் அடுத்து நடக்கக்கூடிய தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது அது கடந்த கால வரலாறு, இது ஒரு சென்டிமென்ட்மான விஷயம்.
நம் நினைவில் வாழும் கலைஞர் அவர்களும், நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் அடிக்கடி நம்மை பாராட்டக் காரணம் இந்தத் துறை மூலம் கழகத்திற்கு பல்வேறு பெருமைகளை சேர்த்து இருக்கிறோம்.
முதலாவது மாநில மாநாட்டினை மதுரையில் 2016 ஜனவரி 24ஆம் தேதி கூட்டினோம். இரண்டாவது மாநில மாநாடு ஜனவரி 10ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு சென்னையில் நடந்தது. இரண்டு மாநாட்டையும் மிஞ்சுகின்ற வகையில் இதே ஜனவரி மாதத்தில் மூன்றாவது மாநாடு நடைபெறுகிறது.
திமுக சட்டத்துறை மாநாடு நடத்தினால் அடுத்து நடக்கக்கூடிய தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது அது கடந்த கால வரலாறு, இது ஒரு சென்டிமென்ட்மான விஷயம். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெள்ளப் போவது உறுதி என்று கூறினார்.
அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு பேசியதாவது, மூன்றாவது மாநாடு என்று சொன்னாலும், மாநாடு நடத்துவதில் என்ன சிரமம் இருக்கும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.
ஆட்சி முடியும் போது பல்வேறு வழக்குகள் இருக்கும். மீண்டும் இந்த வழக்குகளை சந்திக்கும் போது வாழ்க்கை தொடர வேண்டுமென்றால் வழக்கறிஞர்கள் ரொம்ப முக்கியம். வழக்கறிஞராக மட்டுமல்ல நீதி பரிபாலனம் சொல்லக்கூடிய இடங்களில் நீங்கள் மற்றும் உங்கள் பிள்ளைகள் இருக்க வேண்டும். அப்படி வந்தால் தான் திராவிட மாடல் ஆட்சி 50 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று அமைச்சர் நேரு பேசினார்.
What's Your Reaction?