சித்தியை திருமணம் செய்ய அடம்பிடித்த இளைஞர்.. 12 பேரை காதலித்து ஏமாற்றியது அம்பலம்
திருவள்ளூர் அருகே மகன் உறவுமுறை இளைஞர் ஒருவர், சித்தியுடன் தான் திருமணம் செய்து கொண்டு வாழ்வேன் என காவல் நிலையத்தில் அடம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. இவரது கணவர் தனிகைவேல். முனியம்மாள் அப்பகுதியில் வீட்டுவேலை செய்துவரும் நிலையில் கணவரை பிரிந்து 24 வயது கொண்ட தேவி என்ற மகளுடன் வசித்து வருகிறார்.
தேவி டிப்ளமோ செவிலியர் படிப்பை முடித்துவிட்டு நோயாளிகளுக்கு வீட்டிலேயே தங்கி மருத்துவம் பார்க்கும் செவிலியர் பணியை செய்து வந்தார். கடந்த நான்கு மாதங்களாக பணி இல்லாமல் வீட்டிலேயே இருந்துவரும் தேவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமானார்.
இது குறித்து மாயமான தனது மகள் கண்டுபிடித்து தருமாறு செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் முனியம்மாள் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதே பகுதியில் சாய்ராம் என்ற 19 வயது இளைஞனும் காணாமல் போனது குறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இருவரும் உறவினர்கள் என தெரியவந்ததால் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இன்று இரு தரப்பினரும் வழக்கறிஞர்கள் மூலம் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 19 வயது இளைஞரான சாய்ராம், சித்தி உறவு முறையான தேவி என்பவரை கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்ததாகவும், இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோவில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தேவி தனியாக வாழ்ந்து வந்த நிலையில் காவல் நிலையத்தில் விசாரணைக்காக இரு தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது தேவியின் தாய்மாமனான மணி என்பவரும் தேவியும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததாகவும், இதற்கிடையில் மூன்று மாதங்களாக தேவியின் நடவடிக்கைகள் மாற்றம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விசாரணை ஒரு புறம் சென்று கொண்டிருக்க திடீரென சோழவரம் அருகே காரனோடை பகுதியில் இருந்து விஜய் என்ற இளைஞரும் தன்னை ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து தன்னிடம் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி பணம் பொருளாக வாங்கியதாகவும் தன்னை ஏன் ஏமாற்றினால் என்று கேள்விக்கு பதில் வேண்டுமென ஆதங்கத்துடன் தேவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் கொண்ட செல்போனோடு காவல் நிலையத்திற்கு விஜய் என்ற இளைஞர் வந்ததால் அடுத்த கட்ட பரபரப்பு மேலோங்கியது.
இதையடுத்து கடுப்பான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், செவிலியராக பணிபுரிந்து வந்த தேவி அடுத்தடுத்து சுமார் 12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம், பொருள் உள்ளிட்டவைகள் பெற்றுக் கொண்டதாகவும் அதற்கான ஆதாரங்களை 19 வயது இளைஞரான சாய்ராம் தரப்பில் வந்த வழக்கறிஞர்கள் புகைப்படங்களுடன் காவல் நிலையத்தில் சமர்ப்பித்தனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் பெண் வீட்டாரோ மகளை தன்னுடன் அழைத்துச் செல்ல தயாராக இருந்த நிலையிலும், 19 வயது இளைஞரான சாய்ராமின் பெற்றோரோ மருமகளுடன் வீட்டுக்கு செல்லலாம் என வழக்கறிஞர்களை நம்பி வாசலில் காத்திருந்தனர்.
இந்நிலையில் கடுப்பான காவல்துறையினரோ, நாங்கள் காவல்துறை வேலை மட்டும்தான் செய்கிறோம் மற்ற எந்த வேலையும் செய்யவில்லை எங்களைப் பார்த்தால் எப்படி தெரிகிறது ஒழுங்காக அவரவர் பெற்றோர்களுடன் செல்லுங்கள் என கூறியும் இருவரும் மறுத்தனர். ஒரு கட்டத்திற்குமேல் செவிலியர் பெண், பல்வேறு நபர்களை காதலித்து ஏமாற்றியது காவல்துறையினருக்கு தெரிந்தது.
இதற்கு மேல் போனால் நம்மையும் நமது தாயையும் சிறையில் அடைத்து விடுவார்கள் என்ற உஷாரான தேவி தனது தாயுடன் செல்கிறேன் என ஒப்புக்கொண்டார். மனம் உடைந்த 19 வயது இளைஞர், தேம்பி அழுததோடு, காவல் நிலையத்தின் உள்ளே இருந்த காதலியை திரும்பி திரும்பி பார்த்தவாறு சென்றார்.
What's Your Reaction?