பைக் டாக்ஸிக்கு கட்டுப்பாடு ஏன்? போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Dec 11, 2024 - 13:55
Dec 11, 2024 - 15:41
 0
பைக் டாக்ஸிக்கு கட்டுப்பாடு ஏன்? போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்

தமிழகத்தில் பைக், ஸ்கூட்டி போன்ற இரு சக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே செல்ல முடியும் என விதிகள் உள்ளது. மேலும், வணிக நோக்கங்களுக்காக சிலர் வாகனங்களை டாக்சியாக பயன்படுத்துகின்றனர். சாதரணமாக ஆட்டோ, காரில் செல்லும் போது பயண தூரமும், அதற்கான செலவும் அதிகமாக உள்ளது. இதனால், பலரும் பைக் டாக்ஸியை பயன்படுத்திவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஊபர், ராபிடோ, ஓலா போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி சேவைகளை வழங்கி வருகின்றன. இது போன்ற பைக் டாக்ஸிகளை பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால், ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்தது. இதனால், சாலை போக்குவரத்து சங்கம் சார்பில், போக்குவரத்துத் துறை ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறையில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வழங்கி, அரசுப்  பணிமனைகளை கணினி மயமாக்கும் செயல்பாட்டை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் . 

பைக் டாக்ஸிகள் தடை செய்யப்படுவதாக தகவல்கள் பரவி வரும் சூழலில், அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

பைக் டாக்ஸிகள் முறையாக இயக்கப்படுகின்றனவா? என கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் இல்லாமல் பைக் டாக்ஸிகள் இயக்கப்படுவதால் பயணிகள் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. ஓட்டுநர் உரிமம், மூன்றாம் நபர் காப்பீடுடன்தான் பைக் டாக்ஸிகள் இயக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

பைக் டாக்சி தொடர்பாக தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றும், மத்திய அரசுடன் இணைந்தே முடிவெடுக்க முடியும்,  தமிழ்நாடு அரசின் சார்பில் உயர் அலுவலர்கள் மூலம் குழு அமைத்து பைக் டாக்சி தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம்.  பைக் டாக்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் தமிழகத்தில் பைக் டாக்சிகளாக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படாது. அது இந்தியா முழுவதற்கும் பொருந்தும். ஆனாலும் நீதிமன்றங்களில் பைக் டாக்சிகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலவித கருத்துகள் கூறப்பட்டுள்ளன.  என்று கூறினார்.

வாகனக் காப்பீடு உள்ளிட்ட விதிகளை முறையாக பின்பற்றாத பைக் டாக்சிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் , மேலும், பயணிகள் பாதுகாப்பு கருதியே பைக் டாக்சிகளை முழுமையாக தணிக்கை செய்ய உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

பைக் டாக்சியில் பயணிப்போரின் பாதுகாப்பு முக்கியம். எனவேதான் பைக் டாக்சியை முழுமையாக தணிக்கை செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணிப்பது சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.  சிறு விபத்து ஏறரபட்டாலும் நீதிமன்றத்தில் நிவாரணம் மறுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

எனவே பைக் டாக்சிகளை எவ்வாறு  நடைமுறைப்படுத்துவது என ஆய்வு செய்து வருகிறோம். ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் பைக் டாக்சியை எதிர்கின்றனர். பைக் டாக்சி மூலம் லட்சக்கணக்கானோர் வேலை பெறுகின்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள் அதை தங்கள் தொழிலுக்கு ஆபத்தாக உணர்கின்றனர். மத்திய அரசின் நடைமுறையையும், நீதிமன்ற உத்தரவையும் பின்பற்ற வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது. எனவே ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பைக் டாக்சியில் பயணிப்போர் விபத்தில் சிக்கினால் இன்சூரன்ஸ் பெறுவதில் வித்தியாசம் உள்ளது.  மத்திய அரசு இது குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.  வாகனத்தை பறிமுதல் செய்யும் நிலைக்கு தற்போது செல்லவில்லை என்றும் அபராதம் மட்டுமே விதிக்கிறோம். அனைத்து துறையிலும் காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் நடக்கின்றன. எனவே அதற்கேற்ப விதிகளை மாற்றும் தேவை இருக்கிறது. 

பேருந்துப் பயணக் கட்டணம் உயர்த்தப்படாததே போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் சென்றதற்கு முக்கியக் காரணம் என்றும், மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவைக்கான நிதியை அரசு வழங்குவதாலேயே போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒன்றாம் தேதியில் சம்பளம் கொடுக்க முடிகிறது என்றும் அமைச்சர் கூறினார். 

பொதுமக்களை பாதிக்கக்கூடாது என்பதால் போக்குவரத்துத்துறை இழப்புகளை சந்தித்து வரும் நிலையிலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.  தமிழகத்தில் ஒரு கி.மீ க்கு  52 காசுதான் பேருந்துப் பயணக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அருகில் உள்ள மாநிலங்களில் 1.10 காசு வரை  ஒரு கிலோ மீட்டருக்கு கட்டண வகிதமாக உள்ளது. பேருந்து போக்குவரத்தால்தான் தமிழகத்தில் சமச்சீர் வளர்ச்சி உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார்.



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow