அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான கொலை மிரட்டல் வழக்கு.. நாளை எதிர்ப்பு..!

சென்னை மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கின்றது.

Jan 9, 2025 - 15:23
 0
அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான கொலை மிரட்டல் வழக்கு.. நாளை எதிர்ப்பு..!
அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான கொலை மிரட்டல் வழக்கு.. நாளை எதிர்ப்பு..!

கடந்த 2002 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் அப்போதைய துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக சென்னை கண்ணப்பன் திடல் மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக பிரச்சினை எழுப்பியது. அப்போது ஆளும் அதிமுக உறுப்பினர்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் மைக், பிளாஸ்டிக் நாற்காலி உள்ளிட்ட பொருள்களை கொண்டு அதிமுக உறுப்பினர்கள் தாக்கியதில் அதிமுக மாமன்ற உறுப்பினர்களாக இருந்த ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்கரசி, குமாரி, உள்ளிட்ட பலர்க்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக அதிமுக மன்ற உறுப்பினர்கள் சுகுமார் பாபு மற்றும் மாநகராட்சி மன்ற செயலாளர் ரீட்டா ஆகியோர் சென்னை பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், செல்வி சௌந்தர்யா, கிருஷ்ணகிரி மூர்த்தி ஆகிய ஏழு பேருக்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவு செய்யபட்டது. 

கலகம் செய்யும் நோக்கில் சட்டவிரோதமாக கூடுதல், சட்டவிரோதமாக ஒருவரை தடுத்துவைத்தால், ஆயுதங்களை கொண்டு தாக்குதல், கொலை மிரட்டல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த வழக்கில் காவல்துறை குற்றபத்திரிகை தாக்கல் செய்யபட்டது.

பின்னர் இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள எம்.பி, மற்றும் எம்.எல்.ஏ கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணைக்கு நடைபெற்றது.

காவல்துறை தரப்பில் 70க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜெயவேல் நாளை வழங்குகிறார். 22 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow