பாமக முகுந்தனுக்கு என்னதான் ஆச்சு? பைசலாகாத பஞ்சாயத்து?
முகுந்தன் இளைஞர் அணித் தலைவராக அறிவிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் கடந்துவிட்டபோதும் கட்சிப் பணிகளில் தலைகாட்டாமல் இருப்பது மட்டுமின்றி, ஆண்டுதோறும் வெளியிடப்படும் பாமக நிழல்நிதி அறிக்கை வெளியீட்டிலும்கூட அவர் கலந்துகொள்ளவில்லை.
'பா.ம.க. மாநில இளைஞரணி தலைவராக முகுந்தனை அறிவிக்கிறேன். அவர் இன்று முதல் பொறுப்பை ஏற்று அன்புமணிக்கு எல்லா வகையிலும் உதவியாக செயல்படுவார்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்து இரண்டரை மாதங்களைக் கடந்தும், கட்சி நிகழ்வுகள் எதிலும் முகுந்தன் தலைகாட்டவில்லை. விசாரித்தால், அன்புமணியின் அன்பு கட்டளையின்படி அவர் 'தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாக ‘ தைலாபுர வட்டாரத்தினர் தெரிவிக்கிறனர்.
What's Your Reaction?






