பூஜைக்கு பூக்களுக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம்... நன்மை உண்டாகும்!
பூஜைக்கு பூக்கள் இல்லாமல் பூஜை செய்யலாமா? பூஜைக்கு பூக்களுக்கு பதிலாக எந்தெந்த பொருட்கள் உபயோகப்படுத்தலாம்? என்பன குறித்து கீழே பார்க்கலாம்.
பொதுவாகவே கடவுளுக்கு பூஜை செய்யும்போது பூக்கள் கொண்டு பூஜை செய்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் பூக்களை உபயோகப்படுத்துவதிலும் சில வழிமுறைகள் இருப்பதாக ஆன்மிக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எப்போதுமே விளக்கு ஏற்றும்போது நேரடியாக தீக்குச்சியால் ஏற்றவே கூடாது. காரணம் தீப்பெட்டிகளை நல்லதுக்கும் பயன்படுத்துவார்கள், கெட்டதுக்கும் பயன்படுத்துவார்கள். எனவே ஊதுபத்தியை கொளுத்திய பின் விளக்கு ஏற்றலாம் அல்லது அகல் விளக்கை ஏற்றிக்கொண்டு அதை வைத்து தீபத்தை ஏற்றலாம் எனக் கூறுகின்றனர்.
எரிந்த திரிகளை குப்பையில் வீசாமல், தினமும் மாற்றும் திரிகளை சேர்த்து வைக்கவேண்டும்.. ஓரளவு திரிகள் சேர்ந்ததுமே, வீட்டிலுள்ளவர்களை கிழக்கு பக்கமாக பார்த்து உட்கார வைத்து, அவர்களக்கு திருஷ்டி கழிக்கலாம். இறுதியில், திருஷ்டி கழித்த திரிகளை வீட்டு வாசலில் வைத்து கொளுத்திவிட வேண்டும். இதனால் வீட்டிலுள்ள துர்சக்திகள் தீயில் எரிந்து, நன்மை பிறக்கும்.
அதே போல் விளக்கு சுடரை ஒரு போதும் கைகள் வைத்தோ அல்லது ஊதியோ அணைக்கவே கூடாது. அதற்கு பதிலாக மலர்களை வைத்து விளக்கை அணைப்பதுதான் சரியான முறையாகும். அதே போல விளக்கு எண்ணெய் தீர்ந்து தானாகவும் அணையக் கூடாது, விளக்குத் திரியும் கருகக் கூடாது. விளக்குத் திரி கருகினால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள், மனக்கசப்புகள், எதிர்மறை ஆற்றல் உள்ளிட்டவை ஏற்படும்.
முல்லை, வில்வம், துளசி, செண்பகம், தாமரை, மரிக்கொழுந்து, மருதாணி போன்றவையெல்லாமே பூஜைக்கு உகந்த மலர்களாகும். ஜாதிப்பூ, தாழம்பூ, கதம்பமலர், அர்த்தராத்திரி போன்றவற்றை இரவு நேர பூஜைகளுக்கு பயன்படுத்தலாம். துலுக்க சாமந்திப் பூக்களை பூஜைக்கு ஒருபோதும் பயன்படுத்த கூடாது. அதே போல மலராது எனத் தெரிந்த மொட்டுகளையும், காலால் மிதிக்கப்பட்ட பூக்களையும் கடவுளுக்கு படைக்கக் கூடாது.
பூஜைக்கு பூக்கள் கிடைக்காத பட்சத்தில் அதற்கு பதிலாக சில பொருட்களை பயன்படுத்தலாம். 2 துளசி இலைகளை வைத்து பூஜை செய்யலாம். துளசி இல்லாவிட்டாலும், ஒரு கிண்ணத்தில் சந்தனம் சேர்த்து, அதில் பன்னீரை ஊற்றி கரைத்து பூஜை அறையில் வைத்து பூஜையை செய்யலாம்.
What's Your Reaction?