தனுசு ராசிக்காரங்களே ரொம்ப கவனமா இருங்க..! ஜோதிடர் ஷெல்வீ துல்லிய கணிப்பு
தனுசு ராசிக்காரர்கள் வரவு செலவுகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று ஜோதிடர் ஷெல்வீ தெரிவித்துள்ளார்.

ஏப்.2 முதல் ஏப்.8 ஆம் தேதி வரையில் அனைத்து வகையான ராசிக்காரர்களுக்கும் என்ன மாதிரியான அணுகுலம் நிலவும் என்பதனை துல்லியமாக கணித்து குமுதம் இதழுக்காக வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. இந்த வார ராசிபலன்களின் முழுவிவரம் பின்வருமாறு-
மேஷம்:
உயர்வுகள் வரக்கூடிய காலகட்டம். அதேசமயம், உணர்ச்சிவசப்படலைத் தவிருங்கள். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். பிறருக்கு வாக்குறுதிகள் எதுவும் தரவேண்டாம். வரவை சுபசெலவாக்குவது நல்லது. செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம். பிறரை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு சீரான போக்கு நிலவும். கலை,படைப்புத் துறையினருக்கு கணிசமான வாய்ப்புகள் வரும். மாணவர்கள் மறதியை மறப்பது நல்லது. வாகனத்தில் நிதானம் முக்கியம். அஜீரணம், அல்சர் உபாதைகள் வரலாம். ஆனைமுகன் வழிபாடு ஆனந்தம் தரும்.
ரிஷபம்:
நல்லவை அதிகரிக்கும் காலகட்டம், நாவடக்கம் முக்கியம். அலுவலகத்தில் அனுகூலக் காற்று வீசும். அதிகாரிகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். வாரிசுகளுடன் மனம் விட்டுப் பேசுங்கள். வரவை சேமிப்பது நல்லது. வழக்குகளில் நிதானம் முக்கியம். செய்யும் தொழிலில் வளர்ச்சி உருவாகும். ஒப்பந்தங்களில் கவனம் அவசியம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு சாதகமான சூழல் உருவாகும். கலை, படைப்புத் துறையினர் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும். மாணவர்கள் சோம்பலை விரட்டுவது முக்கியம். ரத்த அழுத்த மாற்றம். பாரம்பரிய உபாதைகள் வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு மகிழ்ச்சி சேர்க்கும்.
மிதுனம்:
சீரான போக்கு நிலவும் காலகட்டம். நேரான செயல்களும் நேர்மையும் முக்கியம். பணியிடத்தில் பணிவே நல்லது. யாருடைய குறையையும் பெரிதுபடுத்த வேண்டாம். குடும்பத்தில் சுமூகப் போக்கு நிலவும். வாழ்க்கைத் துணை உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். சுபகாரியங்களில் வீண் ரோஷம் வேண்டாம். பெற்றோர் வார்த்தைகளை மதியுங்கள். செய்யும் தொழிலில் முயற்சிக்கு ஏற்ப பலன் கிட்டும். அரசு அனுமதிகளில் அலட்சியம் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு நிலைக்கும். கலை, படைப்புத் துறையினருக்கு கணிசமான வாய்ப்புகள் வரும். துணை உடல்நலத்தில் மாணவர்களுக்கு, அதிகாலைப்படிப்பு நன்மை தரும். தூக்கமின்மை, மன அழுத்தம் வரலாம். சிவன் வழிபாடு சீரான நன்மை தரும்.
கடகம்:
உயர்வுக்கு உத்தரவாதம் கிட்டக்கூடிய காலகட்டம். எதிலும் முழு கவனம் இருப்பது முக்கியம். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். பணத்தைக் கையாள்வதில் அலட்சியம் கூடாது. குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். மணமாலை, மகப்பேறு கிட்டும் அறிகுறிகள் தெரியும். வழக்குகள் சுமுகத் தீர்வாகும். ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் செழிப்பு உருவாகத் தொடங்கும். பங்கு வர்த்தகத்தில் அவசரம் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர் வாக்குறுதிகளில் நிதானம் காப்பது நல்லது. கலை, படைப்புத் துறையினர் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகள் கிட்டும். மாணவர்களுக்கு மனம்போல் உயர்வுகள் உண்டு. தலை, கழுத்து, மூட்டு, முதுகு உபாதைகள் வரலாம். கணபதி வழிபாடு களிப்பு சேர்க்கும்.
சிம்மம்:
விட்டுக்கொடுத்தால் விசேஷங்கள் வரக்கூடிய காலகட்டம். பிடிவாதமும், ரோஷமும் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். ஏற்றம் மாற்றத்திற்கு காத்திருப்பதே நல்லது. இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். இன்சொல்லும் விட்டுக்கொடுத்தலும் இருந்தால் நல்லவை நிலைக்கும். வரவை வீண் செலவு செய்ய வேண்டாம். சுபகாரியங்களில் நிதானம் முக்கியம். செய்யும் தொழிலில் திட்டமிடல் முக்கியம். களியாட்டங்கள் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர் அடக்கமாகச் செயல்படுவது நல்லது. கலை, படைப்புத் துறையினர் ரகசியங்களை கட்டிக்காப்பதே நல்லது. மாணவர்கள் கவனச் சிதறலுக்கு இடம்தரவேண்டாம். மன அழுத்தம், மூட்டுகள், தொண்டை உபாதை வரலாம். இஷ்ட அம்மன் வழிபாடு கஷ்டம் போக்கும்.
கன்னி:
வளர்ச்சி ஏற்படத்தொடங்கும் காலகட்டம். இந்த சமயத்தில் வீண் வாதங்கள் கூடாது. பணியிடத்தில் உங்கள் திறமை உணரப்படும். வீண் தர்க்கம் யாருடனும் வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். உறவுகளிடம் உங்கள் செல்வாக்கு உயரும். யாருடைய குறையையும் பெரிதுபடுத்த வேண்டாம். வரவை சேமிப்பது நல்லது. செய்யும் தொழிலில் புதிய முதலீட்டில் நிதானம் தேவை. தரல், பெறலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். அரசு, அரசியலில் உள்ளோர், அடக்கமாக இருப்பதே நல்லது. கலை, படைப்புத் துறையினர் முயற்சிக்கு வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் மனம்போல உயர்வுகள் வரும். தேவையற்ற பயணங்களைத் தவிருங்கள். தலைசுற்றல், கழுத்து, நரம்பு உபாதைகள் வரலாம். பெருமாள் வழிபாடு பெருமை சேர்க்கும்.
துலாம்:
தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகங்களில் எதிர்பார்த்த மாற்றங்கள் கைகூடும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் குதர்க்கம் தவிருங்கள். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. பெற்றோர் பெரியோர் ஆசிகிட்டும். ஆடை, ஆபரணம் சேரும். யாருக்கும் வாக்குறுதி தரும் முன் யோசியுங்கள். செய்யும் தொழிலில் புதிய முதலீடுகள் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு அதிகரிக்கும். கலை, படைப்புத் துறையினர் படைப்பு ரகசியங்களைப் பகிர வேண்டாம். மாணவர்களின் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். பயணத்தில் உடைமைகள் பத்திரம். மூட்டு, முதுகு, வயிறு உபாதைகள் வரலாம். தன்வந்திரி வழிபாடு தழைக்கச் செய்யும்.
விருச்சிகம்:
முயற்சிகளால் முன்னேற்றம் காண வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் கைகூடிவரும். பொறுப்புகளில் நேரடி கவனம் தேவை. பணத்தைக் கையாள்வதில் அலட்சியம் கூடாது. வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத்துணை வார்த்தைகளைக் கேளுங்கள். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம். கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறித்துவையுங்கள். பொது இடங்களில் குடும்ப ரகசியம் பேசவேண்டாம். செய்தொழிலில் சோம்பலில்லா உழைப்பு முக்கியம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு நிலைக்கும். வாக்கில் நிதானம் முக்கியம், கலைத்துறையினர்க்கு வாய்ப்புகள் வரத்தொடங்கும். மாணவர்களுக்கு மனம்போல மதிப்பெண்கள் உயரும். இரவுப் பயணத்தில் நிதானம் முக்கியம். அடிவயிறு, கால்பாதம் உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு நன்மை சேர்க்கும்.
தனுசு:
சீரான நன்மைகள் வரும் கால கட்டம். அலுவலகத்தில் பொறுப்பு உணர்வு, திட்டமிடல், நேரம் தவறாமை முக்கியம். இல்லத்தில் இனியவை நடக்கத் தொடங்கும். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் பகிர வேண்டாம். தரல் பெறலில் நிதானம் தேவை, சுபகாரியங்களில் ஆடம்பரம் கூடாது. செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு வளர்ச்சி ஆரம்பிக்கும். கலைஞர்கள், எதிர்பாலரிடம் எச்சரிக்கையாகப் பழகுங்கள். மாணவர்களுக்கு கவனச் சிதறல் கூடாது. வாகனப்பழுதில் அலட்சியம் வேண்டாம். நரம்பு, ரத்தநாள உபாதைகள் வரலாம். இஷ்ட வழிபாடு, வாழ்வில் இனிமை சேர்க்கும்.
மகரம்:
கெட்டது விலகி தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். மறைமுக எதிரிகள் பலம் அதிகரிக்கலாம், கையெழுத்திடும் சமயங்களில் கவனம். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையால் வசந்தம் வரும். வீடு, மனை வாங்க, புதுப்பிக்க யோகம் உண்டு. தினமும் சிறிது நேரமாவது குலதெய்வத்தைக் கும்பிடுவது நல்லது செய்யும். தொழிலில் லாபம் சீராகும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு திடீர் பொறுப்பு அதிகரிக்கும். கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வரும். மாணவர்களுக்கு நிதானம் முக்கியம். பயணத்தில் பிறர் தரும் உணவு, பானங்களைத் தவிருங்கள். தலைவலி, அஜீரணம், தூக்கமின்மை உபாதைகள் வரலாம். பைரவர் வழிபாடு பசுமை சேர்க்கும்.
கும்பம்:
எண்ணம் போல் ஏற்றங்கள் வரும் காலகட்டம். இந்த சமயத்தில் வீண் ரோஷம் வேண்டாம். அலுவலகத்தில் எதிர்பாரா நன்மைகள் உண்டு. சிலருக்கு புதிய பணி வாய்ப்பு வரும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும். உணவில் நிதானம் முக்கியம். யாருக்கும் வாக்குறுதி தருவதைத் தவிருங்கள். செய்யும் தொழிலில் நேரடி கவனமும் நேர்மையும் அவசியம். அரசு, அரசியலில் உள்ளவர்கள் பொறுப்பு நிலைக்கும். கலை, படைப்புத் துறையினர் திறமைக்கு ஏற்ப வாய்ப்பு வரும். மாணவர்கள் கவனச்சிதறலைத் தவிர்ப்பது முக்கியம். இரவு பயணத்தை இயன்றவரை தவிருங்கள். மூட்டு, முதுகு, கழுத்து உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு நன்மை சேர்க்கும்.
மீனம்:
அமைதியாக செயல்பட்டால், அநேக நன்மைகள் கைகூடும் காலகட்டம். பணியிடத்தில் உடனிருப்போர் ஆதரவு கிடைக்கும். பலகாலக் கனவுகள் கைகூடி வரும் அறிகுறிகள் தெரியும். தேவையற்ற படபடப்பு தவிர்ப்பது நல்லது. வீட்டில் உறவுகள் வருகையும் அதனால் ஆதாயமும் ஏற்படும். யாரிடமும் வீண் கடுமை வேண்டாம். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். கூட்டுத் தொழிலில் வீண் சந்தேகம் தவிருங்கள். அரசுத்துறை, அரசியல் துறையில் இருப்பவர்கள் அவசரம், அலட்சியம் தவிர்ப்பது அவசியம். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டலை அவசியம் கேளுங்கள். வாகனத்தில் வேகம் வேண்டாம். சளி, அல்சர், அலர்ஜி உபாதைகள் வரலாம். அனுமன் வழிபாடு ஆனந்தம் சேர்க்கும்.
What's Your Reaction?






