தேநீர் விருந்து.. த.வெ.க தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்..!
குடியரசு தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றி கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு தினத்தன்று ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தேநீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் குடியரசு தினவிழாவையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும், இடையிலான பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில், திமுகவை புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, திமுகவின் கூட்டணி கட்சிகளும் புறக்கணித்து விடும், அதே நிலையே இந்த ஆண்டும் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தேநீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள பலருக்கும் அழைப்பு விடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் கட்சியாக பதிவு செய்து, ஒரு தேர்தலை கூட எதிர்கொள்ளாத நிலையில், தவெகவிற்கு ஆளுநர் அழைத்து விடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் இந்த அழைப்பு கவனம் பெற்றுள்ளது.
ஆளுநரின் அழைப்பை ஏற்று குடியரசு தினத்தன்று நடைபெறும் தேநீர் விருந்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்வாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
What's Your Reaction?